*சிவகங்கை மாவட்டத்தில் மூடிய 4 பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயற்குழுவில் தீர்மானம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/08/4.html
*🌟சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் _தோழர்.தாமஸ் அமலநாதன்_ தலைமையில் நடந்தது. மாநிலத் துணைத்தலவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_ மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி_ முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்டப் பொருளாளர் _தோழர்.குமரேசன்,_ மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் _தோழர்.ஞான அற்புதராஜ்,_ _தோழர்.சிங்கராயர்,_ _தோழர்.ஆரோக்கியராஜ்,_ மாவட்ட துணை செயலாளர்கள் _தோழர்.ரவி,_ _தோழர்.ஜெயக்குமார்,_ மாவட்ட துணைத்தலைவர் _தோழர்.மாலா_ உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*
_கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன._
*🌟சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியம் அம்மாபட்டினம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தம், இளையான்குடி ஒன்றியம் சுந்தனேந்தல், கண்ணங்குடி ஒன்றியம் பூதங்குடி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள களப்பிரச்சனையை ஆராய்ந்து தீர்வு கண்டு மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்திட கல்வித்துறை முன் வரவேண்டும்.*
*🌟அரசு பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும், தமிழ்வழி கிராமப்புற கல்வியை பாதுகாக் வேண்டியும், தேசியக்கல்விக்கொள்கை வரைவு 2019ல் உள்ள அபதங்களையும், ஆபத்துக்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டும் சென்று அதை திரும்ப பெறும் நோக்கில் செப்டம்பர் 23 முதல் தமிழகம் முழுவதும் 6 முனைகளில் இருந்து பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும் சிவகங்கை மாவட்டத்தில் 7 இடங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*
*🌟மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இருந்து எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தால் பழைய பள்ளிக்கே மீள ஈர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.*
*🌟2019-2020 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து இறுதி தீர்ப்பை பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முயற்சிப்பதோடு முரணான விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பொதுமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்திட வேண்டும்.*
*🌟ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் குறுவள மையங்களின் தலைமையிடமாக இனிமேல் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கும் என்பதும், அப்பள்ளியின் தலைமையாசிரியர் குறுவளமைய எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொள்வார் என்பதும் இத்திட்டத்தில் தேவையற்ற பல்வேறு குழப்பங்கைள விளைவிக்கும் என்பதால் தமிழக அரசு இம்முடிவை திரும்பபெற வேண்டும்.*
*🌟நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்திட வேண்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் மொத்த பணிக்காலத்தை கணக்கிட்டு தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளித்திட வேண்டும்.*
*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிவரன்முறை தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை உத்தரவுகள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளன. எனவே தொடக்கக்கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல் படி குறை தீர் முகாமை மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடத்திட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.*
*🌟பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளதைப்போல தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் குறைகளை களையும் பொருட்டு தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இருந்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒரு நேர்முக உதவியாளரை நியமிக்க வேண்டும்.*
🤝தோழமையுடன்;
*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*சிவகங்கை மாவட்டம்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment