Tuesday, 17 September 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை எண்: 26/2019 நாள்:17.9. 2019*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/262019-179-2019.html

*_அன்பார்ந்த மாவட்ட செயலாளர்களே! வணக்கம்_*

*🤝நம் பேரியக்கத்தின் கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் ஆறு முனைகளிலிருந்து துவங்கி 25.9.2019 முதல் 29.9.2019 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. 29.9.2019 அன்று மாலை கரூர் நகரில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.*

*🤝மேற்படி மாநிலம் தழுவிய பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி பெறுவதற்காக சென்னையில் மாநில காவல்துறை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) அலுவலகத்தை நேற்று(16.9.2019) மாநில மையப் பொறுப்பாளர்கள் அணுகியபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெறுவதற்கு உரிய கருத்துக்களை அளிக்குமாறு தெரிவித்துள்ளார்கள்*

*🤝எனவே, மாவட்டச் செயலாளர்கள் அவ்வாறு அனுமதி பெறுவதற்குரிய விவரங்களைத் தயார் செய்து மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது*

*🤝அவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் மாவட்டத்தில் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்,பிரச்சார நேரம்,பிரச்சார வாகனத்தின் R.C புத்தகம் நகல், வாகன இன்சூரன்ஸ் சான்று நகல், வாகன ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் நகல்,வாகனத்தில் பயன்படுத்தும் ஒலிபெருக்கி அனுமதிக்கான விண்ணப்பம் ஆகியவற்றையும் இணைத்து அளிக்க வேண்டும்*

*🤝இப்பணியைக் காலதாமதமின்றி மேற்கொள்ள மாநில மையம் மாவட்ட நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்_*
*பொதுச் செயலாளர்* 
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: