🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/15-tnptf.html
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⚔*
*🛡15.09.2019 அன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் _தோழர் மூ.மணிமேகலை_ தலைமையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுத் தீர்மானங்கள்.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 1 - இரங்கல் தீர்மானம்*
*⚡தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம் இடைநிலை ஆசிரியை திருமதி. மா.லதா, காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளர் திரு.சீ.குமார், தஞ்சாவூர் மாவட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.J.சார்லி தேவப்பிரியம் அவர்களின் தந்தையார் திரு.ஜான் பீட்டர் ஆகியோரின் மறைவுக்கு இம்மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 2 - கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம் & பொதுக்கூட்ட ஏற்பாடுகள்*
*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 25.09.2019 முதல் 29.09.2019 முடிய 6 முனைகளிலிருந்து நடைபெறவுள்ள கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தை மிகச்சிறப்பாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், 29.09.2019 அன்று மாலை கரூர் நகரில் நடைபெறும் நிறைவுப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை பங்கேற்கச் செய்திடும் வகையில் ஒவ்வொரு வட்டார, நகரக் கிளைகளிலிருந்தும் வாகன ஏற்பாடு செய்து ஆசிரியர்களை அழைத்து வருவதற்குரிய பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும் எனவும் மாவட்ட, வட்டார, நகர கிளை அமைப்புக்களை இம்மாநிலச் செயற்குழு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 3 - STFI & AIFUCTO கல்வி உரிமைக் கருத்தரங்கப் பங்கேற்பு*
*⚡STFI மற்றும் AIFUCTO ஆகிய அமைப்புக்கள் இணைந்து தேசியக் கல்விக் கொள்கை – 2019 தொடர்பாக 22.09.2019 அன்று மதுரையில் மன்னர் கல்லூரி கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்துள்ள மாநில அளவிலான கல்வி உரிமைக் கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கள்ளர் பள்ளி மாவட்டக்கிளைகளிலிருந்து அதிக அளவில் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக்கிளைகள் மேற்கொள்ளவும், மற்ற மாவட்டங்களிலிருந்து மாநில, மாவட்ட, வட்டாரக்கிளைகளின் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளவும் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 4 - தென்னிந்திய அளவிலான பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி பங்கேற்பாளர் பட்டியல்*
*⚡இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) சார்பில் 01.10.2019 மற்றும் 02.10.2019 ஆகிய இரு நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்கும் பெண் ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை மாநிலத் தலைவர் அவர்கள் இறுதி செய்வதென இம்மாநிலச் செயற்குழு முடிவாற்றுகிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 5 - சோளிங்கர் வட்டாரக்கிளை கலைப்பு மீதான விசாரணைக் குழு & புதிய நிர்வாகிகள் தேர்வு நிராகரிப்பு*
*⚡வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் வட்டாரக்கிளை 28.08.2019 நாளிட்ட வேலூர் மாவட்டச்செயற்குழு தீர்மானத்தின் மூலம் கலைக்கப்பட்டது தொடர்பாக பெறப்பட்ட மேல்முறையீட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு மாநில செயற்குழுவிற்கு அறிக்கை அளிப்பதற்காக கீழ்க்கண்ட ஐந்து மாவட்டச் செயலாளர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை மாநிலச் செயற்குழு நியமனம் செய்கிறது.*
*⚡1. திரு.யு.கே.சண்முகம், குழுத்தலைவர், ஈரோடு மாவட்டச்செயலாளர்*
*⚡2.திரு.ஜோ.கிறிஸ்டோபர், கடலூர் மாவட்டச்செயலாளர்*
*⚡3.திரு.எஸ்.சுனில்குமார், நீலகிரி மாவட்டச்செயலாளர்*
*⚡4.திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச்செயலாளர்*
*⚡5.திரு.இரா.சண்முகசாமி, விழுப்புரம் மாவட்டச்செயலாளர்.*
*⚡மேலும், சோளிங்கர் வட்டாரக்கிளை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சோளிங்கர் வட்டாரத்தில் நடைபெற்றுள்ள நிர்வாகிகள் தேர்வு இயக்கத்தின் அமைப்பு விதிகளுக்கு முரணானது என்பதால் அந்நிர்வாகிகள் தேர்வை இம்மாநிலச் செயற்குழு நிராகரிப்பதோடு, இயக்கத்தின் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு சோளிங்கர் வட்டாரத்தில் அமைப்புக் குழுவை ஏற்படுத்துவதே சரியானது என்பதை இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தெரிவிக்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 6 - நிதி நிலுவைகள் தொடர்பான சிறப்புக் கூட்டம்*
*⚡மாவட்ட அமைப்புக்கள் மாநில அமைப்பிற்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைகள் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டக்கிளைகளுக்கும் மாநிலப்பொருளாளர் பதிவு அஞ்சல் கடிதம் அனுப்புவதெனவும், நிதி நிலுவைகள் தொடர்பாக மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர், மாவட்டப்பொருளாளர் அடங்கிய சிறப்புக் கூட்டத்தை 06.10.2019 அன்று திருச்சியில் நடத்துவதெனவும் இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 7 - பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகளை ரத்து செய்க!*
*⚡30.08.2019 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வில் அரசாணைகளுக்கும், விதிகளுக்கும் புறம்பாக பணிமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறான நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்மொழி உத்தரவுகள் என்ற பெயரில் 10-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளதோடு, அரசாணைகளுக்கு முரணாக 61 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளிலிருந்து மூன்றாவது ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக கருதப்பட்டு பணிமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இக்கலந்தாய்வை ரத்து செய்திட தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 8 - 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவை முற்றாகக் கைவிடுக!*
*⚡தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு/அரசு உதவி பெறும் துவக்கப்/நடுநிலைப்பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக அரசாணை எண் 164 நாள்: 13.09.2019 ன் படி ஆணையிடப்பட்டுள்ளது. சுமையின்றி கற்கவும், இடைநிற்றல் இன்றி கற்கவும், குழந்தைகளின் மகிழ்வான பள்ளி பருவத்தை பொதுத்தேர்வு என்ற வரையறைக்குள் கொண்டுவந்து பள்ளிக்கல்வி மீதான பயத்தை 10 மற்றும் 13 வயதிலேயே கொண்டு வரும் இம்முடிவை முற்றாக கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை கோருகிறது. கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பள்ளிக் கல்விக்கு வரும் குழந்தைகள் மீதான உளவியல் ரீதியான சிந்தனை மற்றும் அணுகு முறையில் எட்டாம் வகுப்பு வரை தேக்கமின்றி தேர்ச்சி என்ற முடிவை முற்றாக மறுதலித்து 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்ற முறை தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியிலிருந்து ஒரு பகுதியினரை வெளியேற்றும் முறையாகத்தான் இருக்கும். தேசியக்கல்விக் கொள்கை - 2019 ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள 3, 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்ற பரிந்துரை குறித்து, மத்திய அரசு எந்த முடிவையும் அறிவிப்பதற்கு முன்பே இராஜாவை விஞ்சும் இராஜவிசுவாசிகள் போல் 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்ற முறை தமிழ்நாட்டின் கல்வித்துறையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நடைமுறை இடைநிற்றலை அதிகப்படுத்துவதற்கும், மாணவர்கள் தங்களது குடும்பத்தினரின் பூர்வீகத் தொழில்களில் ஈடுபடும் அபாயங்களும் ஏற்படும். மாணவர்களை பள்ளிக்கல்வி முழுவதும் தேர்வு பயத்தில் வைத்திருக்கும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்ற முடிவை முற்றாகக் கைவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி வலியுறுத்துகிறது. தமிழகப் பள்ளிக்கல்வியைச் சீரழிக்கும் இம்முடிவை உடனடியாகத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என இம்மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 9 - பருவ விடுமுறையில் நடத்தவுள்ள காந்தி கொள்கை விழா அறிவிப்பைத் திரும்பப் பெறுக!*
*⚡மகாத்மா காந்தியின் கொள்கைகளும், கோட்பாடுகளும், இலட்சியங்களும், சிந்தனைகளும், வாழ்வியல் நெறிமுறைகளும் வாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடித்து வாழவேண்டிய நெறிமுறைகளாகும். அன்றாடம் பள்ளி நடைமுறைச் செயல்பாடுகளிலும், கற்பித்தல் நிகழ்வுகளிலும் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டிய உன்னதமான வாழ்வியல் கூறுகளாகும். அப்படிப்பட்ட தேசப்பிதா மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் காந்திய மதிப்புக்களை மையமாக வைத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவது என்பதும் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 680/அ1/ஒபக/2019 நாள்: 09.09.2019 ல் மகாத்மாவின் 150 வது பிறந்ததினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு விடுமுறையில் 23.09.2019 முதல் 02.10.2019 முடிய மாணவர்களுக்கான செயல்பாடுகள் மற்றும் போட்டிகளை அறிவித்திருப்பது பொருத்தமானதல்ல என்பதை இம்மாநிலச் செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. தேர்வு விடுமுறை என்பது தேர்வுக்கான மன அழுத்தத்திலிருந்து மாணவர்களை வெளிக்கொண்டு வருவதற்கான காலஇடைவெளி ஆகும். குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற அந்த வாய்ப்பையும் பறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்ட மாநில இயக்குநரின் ஆணையைத் திரும்பப்பெற தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*⚔*
*🛡தீர்மானம் எண்: 10 - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வை விரைந்து நடைமுறைப்படுத்துக!*
*⚡கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் (வட்டாரக்கல்வி அலுவலர்) பதவி உயர்வு வழங்குவதைக் காலதாமதமின்றிச் செயல்படுத்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் அவர்களை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*சென்னை.*
*15.09.2019*
🤝தோழமையுடன்,
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*🛡15.09.2019 அன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் _தோழர் மூ.மணிமேகலை_ தலைமையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுத் தீர்மானங்கள்.*
*🛡தீர்மானம் எண்: 1 - இரங்கல் தீர்மானம்*
*🛡தீர்மானம் எண்: 2 - கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம் & பொதுக்கூட்ட ஏற்பாடுகள்*
*🛡தீர்மானம் எண்: 3 - STFI & AIFUCTO கல்வி உரிமைக் கருத்தரங்கப் பங்கேற்பு*
*🛡தீர்மானம் எண்: 4 - தென்னிந்திய அளவிலான பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி பங்கேற்பாளர் பட்டியல்*
*🛡தீர்மானம் எண்: 5 - சோளிங்கர் வட்டாரக்கிளை கலைப்பு மீதான விசாரணைக் குழு & புதிய நிர்வாகிகள் தேர்வு நிராகரிப்பு*
*🛡தீர்மானம் எண்: 6 - நிதி நிலுவைகள் தொடர்பான சிறப்புக் கூட்டம்*
*🛡தீர்மானம் எண்: 7 - பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகளை ரத்து செய்க!*
*🛡தீர்மானம் எண்: 8 - 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவை முற்றாகக் கைவிடுக!*
*🛡தீர்மானம் எண்: 9 - பருவ விடுமுறையில் நடத்தவுள்ள காந்தி கொள்கை விழா அறிவிப்பைத் திரும்பப் பெறுக!*
*🛡தீர்மானம் எண்: 10 - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வை விரைந்து நடைமுறைப்படுத்துக!*
*15.09.2019*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment