🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_27.html
*TNPTF பொதுச்செயலாளரின்,*
*சுற்றறிக்கை எண்: 28*
*நாள்: 27.09.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡25.09.2019-ல் தொடங்கிய கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.*
*⚔*
*🛡இராமநாதபுரம், புதுக்கோட்டை, கோவை, வேலூர், விழுப்புரம், நீலகிரி என ஆறு முனைகளிலிருந்து 25.09.2019 அன்று தொடங்கிய வாகனப் பிரச்சாரம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் பெருத்த வரவேற்புக்கிடையில் மூன்றாவது நாளை இன்று எட்டியிருக்கிறது,*
*⚔*
*🛡தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கையைத் திரும்பப் பெறுதல், அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்தல் என்ற தேசத்தின் மிகமுக்கியப் பிரச்சனைகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் நம்முடைய பிரச்சாரப் பயணத்தின் மூலம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.*
*⚔*
*🛡முதல் பருவ விடுமுறை நாட்களில் நாம் நடத்திவரும் இந்தப் பிரச்சாரப் பயணம் தமிழ்நாட்டின் கல்விக்களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.*
*⚔*
*🛡பிரச்சாரப் பயணக்குழுவை வரவேற்று தங்கள் எல்லையிலிருந்து இருசக்கர வாகனங்களில் இயக்கப் பதாகையை உயர்த்திப்பிடித்து நம் தோழர்கள் அழைத்து வருகின்ற காட்சி, அதில் பெருமளவில் பெண்ணாசிரியர்கள் பங்கேற்கும் நிகழ்வு என்பது நம் இயக்க வரலாற்றில் இடம்பெறுகிற நிகழ்வுகளாகும்.*
*⚔*
*🛡ஒவ்வொரு பிரச்சாரப் பயணக் குழுவோடும் இணைந்து வருகிற கலைக்குழுக்கள் பிரச்சாரத்தை தொடங்கும் முன்பு தங்கள் கலை நிகழ்ச்சிகள் மூலமாக மக்களை ஈர்ப்பது என்பது பிரச்சாரத்தின் முத்தாய்ப்பாக உள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நம் மாநில நிர்வாகிகள் உட்பட அனைத்துத் தோழர்களும் ஆற்றி வருகின்ற இப்பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.*
*⚔*
*🛡பொதுச் பிரச்சனைகளைக் கையிலெடுத்து நாம் மேற்கொண்டுள்ள இப்பிரச்சாரப் பயணம் நம் நினைவலைகளில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி. இப்பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக்கிட நம் மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி என்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.*
*⚔*
*🛡தோழர்களே! இன்னும் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது நிறைவாக 29.09.2019 மாலை கரூர் நகரில் நாம் நடத்தவுள்ள நிறைவுப் பொதுக்கூட்டம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எத்தனை சிரமங்கள் இருப்பினும் அதைத் தாங்கிக் கொண்டு நிறைவுப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக்க வேண்டிய பொறுப்பு நம் மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பொறுப்பாளர்களின் கைகளிலேயே உள்ளது.*
*⚔*
*🛡கரூர் பொதுக்கூட்டம் நம் இயக்கத்தின் வலிமையைப் பறைசாற்றக்கூடியது. ஒவ்வொரு வட்டார, நகரக் கிளைகளிலிருந்தும் வாகன ஏற்பாடு செய்வதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.*
*⚔*
*🛡26.09.2018 ல் சென்னையில் நாம் நடத்திய அரசாணை எரிப்புப் போராட்ட ஆயத்த மாநாட்டை மிஞ்சும் வகையில் நம் இயக்க உறுப்பினர்கள் கரூர் நகருக்கு வருகை தர வேண்டும்.*
*⚔*
*🛡ஆசிரியர்களின் எழுச்சி மத்திய, மாநில அரசுகளின் செவிப்பறைகளை எட்ட வேண்டும்.*
*⚔*
*🛡கரூர் பொதுக்கூட்ட நிகழ்வுக்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் 'புதுகை பூபாளம்" குழுவினரின் கலை நிகழ்ச்சியை நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் பிரச்சாரப் பயணத்தைத் திட்டமிட மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.*
*⚔*
*🛡 மீதியுள்ள இரண்டு நாட்கள் பிரச்சாரப் பயணத்தையும் ஒரு மாவட்டத்தை மற்றொரு மாவட்டம் மிஞ்சுகிறவகையில் மிகவும் வெற்றிகரமாக நடத்திட நம் இயக்கப் பொறுப்பாளர்கள் பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட வேண்டும். நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகின்ற பிரச்சாரப் பயணம் தொடர்பாக 'ஊடகச் செய்தி" வழங்குவதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
சென்னை.
27.09.2019
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment