Friday, 27 September 2019

*TNPTF - பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் - பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் வெற்றி பெற அணிவகுப்போம் கரூர் நோக்கி...*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/tnptf_27.html

*_TNPTF AYAN_ YOUTUBE CHANNEL*

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்று வரும் பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மூன்று நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.*

*🚌இப் பிரச்சார இயக்கத்தில் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/TjibaTOzQ8A

*🚌பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வரவேற்பு என்பது ஒவ்வொரு மாவட்டமும் ஒருவருக்கொருவர் முந்துகின்ற வகையில் சிறப்பான வரவேற்பினை அளித்தது தோழர்களின் ஆர்வத்தினை காண முடிகிறது.*

*🛵🏍குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பரிவட்டம் கட்டி பூரண கும்பமளித்து வரவேற்ற நிகழ்வு, பெண் தோழர்களும் ஆண் தோழர்களும் தலைகவசம் அணிந்து இரண்டு சக்கர வாகனங்களிலும் சில ஒன்றியங்களில் ஆட்டோக்களில் நமது இயக்க பதாகைகளை ஏந்தி அணிவகுத்தது சிறப்பிலும் மிகச்சிறப்பு*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/tkq77p3wwN8

*🚌பிரச்சாரம் இறுகட்டத்தினை நெருங்கி வருகின்ற வேலையில் நாம் தோய்வடையாது பணியாற்ற வேண்டிய கடமை இருக்கிறது, ஆம் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம். இந்த மாபெரும் பொதுக்கூட்டமானது கரூர் நகரில் 80 அடி சாலையில் (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.*

*🚌இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வாகனம் ஏற்பாடு செய்து நமது இயக்க தோழர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு 80 அடி சாலை நிறம்பி வழிய ஒத்துழைப்பு நல்க வேண்டும், நமது பிரச்சாரம் வெற்றிபெற அணிவகுப்போம் கரூர் நோக்கி...*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: