Friday, 13 September 2019

*அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_6.html

*📒பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன்   அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக ளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:_*

*📒மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைப் பள்ளி (நடுநிலைப் பள்ளி) ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது.*

*📒தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசிய கருத்தாளர்கள் குழு மாநில கருத்தாளர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிப்பர். இந்த மாநில கருத்தாளர்கள் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம்மற்றும் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்கப்படும்.இதற்காக மாநில அளவில் 6 பேர் கொண்ட கருத்தாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன.*

*📒இதில் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு செப்.16 முதல் 21-ம் தேதி வரையும், மதுரை உட்பட இதர 16 மாவட்டங்களுக்கு 23 முதல் 28-ம் தேதி வரையும் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் அக்டோபர் மாதம் மாநில கருத்தாளர்கள் மூலம் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: