Friday, 6 September 2019

*சந்திராயன் 2 - விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் நேரடி காட்சி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭


*_Live Telecast Video link_*

👇👇👇👇👇👇👇👇

http://youtu.be/2srV-bEi_DU


https://tnptfayan.blogspot.com/2019/09/t-n-p-t-f-live-telecast-video-link-http.html

சரித்திர சாதனை படைத்த இந்தியா! ஆச்சர்யத்துடன் பார்க்கும் உலக நாடுகள்!


சரித்திர சாதனையைப் படைத்துள்ளது இந்தியா.உலக நாடுகள் எல்லாம் இன்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் இந்தியாவைப் பார்த்து வருகிறது. நிலவின் இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதளப் பரப்பில் சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர், நாளை அதிகாலை நேரத்தில் தரையிறக்கப்படுகிறது. இந்தியா நிகழ்த்தவுள்ள வரலாற்றுச் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பார்ப்பதற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வரவுள்ளதால், பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


விக்ரம் லேண்டரானது நிலவைச் சுற்றும் தொலைவு இரு முறை குறைக்கப்பட்டு, தற்போது நிலவில் இருந்து குறைந்தபட்சமாக 35 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 101 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது.இந்த நிலையில், விக்ரம் லேண்டரை நிலவில் தரை இறக்கும் மிகவும் சவால் மிகுந்த செயல்பாட்டை நாளை அதிகாலை ஒன்றரை மணி தொடங்கி 2.30 மணிக்குள்ளாக இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.

விக்ரம் லேண்டரின் திரவ எரிபொருள் எஞ்சின் 10 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டு நிலவுக்கும் - லேண்டருக்கும் இடையேயான தொலைவு 7.4 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும். 38 நொடிகளுக்குப் பிறகு நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் உள்ள தூரம் 5 கிலோ மீட்டராக குறைக்கப்படும். 89 நொடிகளுக்குப் பின், 400 மீட்டர் என்ற உயரத்தில் நிலவை லேண்டர் அணுகும். அதன் பிறகு 66 நொடிகளில் 100 மீட்டர் உயரத்தை விக்ரம் அடையும்.

நிலவில் ஒருநாள் என்பது பூமியுடன் ஒப்பிடுகையில் 14 நாட்களுக்குச் சமம். அந்த வகையில், 14 நாட்களுக்கு தகவல்களைச் சேகரிக்கும். இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆய்வூர்தியை தரை இறங்கிய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா பெறுகிறது.வல்லரசு நாடாகவும் காணப்படுகிறது.


அது மட்டுமல்லாமல் நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரை இறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைக்கிறது. தென் துருவத்தில் உள்ள நிலவுப் பள்ளங்கள் சூரிய வெளிச்சம் படாமல் மறைவாக இருக்கும் காரணத்தால் அங்கு 100 மில்லியன் டன் தண்ணீர் இருக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் சூரியக் குடும்பம் உருவானது எப்படி என்பதற்கான விடையும் தென் துருவ ஆராய்ச்சியில் கிடைக்கும் என்ற காரணத்தால் தான் தென் துருவத்திற்கு அருகே ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்தது. 


சந்திரயான் 2 திட்டம், 90 விழுக்காடு முழுமை அடைந்துள்ள நிலையில், இன்னும் 10 விழுக்காடு வெற்றிபெறும் பட்சத்தில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையைப் படைக்கும்.அப்படி சாதனை படைக்க நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம்..நாளைய  விடியல் இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைய எனது பிரார்த்தனை.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: