Saturday, 7 September 2019

*செப்.09 : STFI-ன் மாவட்டத் தலைநகர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை பேரெழுச்சியோடே நடத்திட TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/09-stfi-tnptf.html

*_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 24/2019_*
*நாள் : 06.09.2019*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்!*

**
*🛡தமிழகம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ-வின் ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியோடு இன்று நடைபெற்றுள்ளது. வழக்கம்போல் நம் பேரியக்கத் தோழர்கள் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடு களத்தில் நின்று பணியாற்றியுள்ளனர். தொடர்ந்து போராட்டக் களமும், இயக்க நிகழ்வுகளும் அடுத்தடுத்து அணிவகுத்து வந்து கொண்டிருக்கும் காலச் சூழல் இது.*

**
*🛡நமது அடுத்த கட்ட உடனடிப் பணி என்பது இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) தமிழ்நாடு மாநிலக்குழு 24.08.2019 அன்று தீர்மானித்தவாறு, STFI-ன் இணைப்புச் சங்கமாகிய,*

**
*🛡"தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.இரவிச்சந்திரன் அவர்களின் தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்!"*

**
*🛡"ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்!"*

**
*🛡என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி _09.09.2019 திங்கட்கிழமை மாலை_ மாவட்டத் தலைநகரங்களில் _முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு_ நாம் நடத்தவுள்ள _பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை_ வெற்றிகரமாக நடத்துவதுதான்.*

**
*🛡அதற்கான களப்பணிகளை நம் பேரியக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மின்னல் வேகத்தில் செயலாற்ற வேண்டிய நேரமிது.*

**
*🛡இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் புதிதாகச் சில சங்கங்கள் தற்போது இணைந்துள்ள நிலையில் அவற்றிற்கான மாவட்ட ஒதுக்கீடு என்பது STFI-ன் அடுத்த தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் தான் இறுதி செய்யப்பட உள்ளது.*

**
*🛡எனவே, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களுக்குத் தற்போதுவரை ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அவர்கள் ஏனைய இணைப்புச் சங்கங்களோடே ஒருங்கிணைப்பை மேற்கொண்டு 09.09.2019 பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.*

**
*🛡தற்போதைய நிலையில் இணைப்புச் சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய விபரம் பின்வருமாறு.*

*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி :*
*_திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவாரூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் & காஞ்சிபுரம்._*

*⚡தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் :*
*_இராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், அரியலூர், நீலகிரி, விழுப்புரம் & திருவள்ளூர்._*

*⚡தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் :*
*_தேனி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி & சென்னை_*

*⚡தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் :*
*_கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை & திருச்சிராப்பள்ளி._*

**
*🛡STFI-ன் இணைப்புச் சங்கங்கள் மேற்கண்ட மாவட்ட ஒதுக்கீட்டின்படி தலைமையேற்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.*

**
*🛡அதற்கேற்ப, நமது பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் இணைப்பு சங்கங்களின் மாவட்டப் பொறுப்பாளர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தினை பேரெழுச்சியோடே நடத்திட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.*

*சென்னை.*
*06.09.2019*

🤝தோழமையுடன்,

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: