🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/t-n-p-t-f-httpstnptfayan.html
*_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 25/2019_*
*நாள் : 08.09.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்!*
*⚔*
*🛡CPS திட்டத்தில் பணியேற்று உயிர் நீத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மணமேல்குடி வட்டாரக்கிளையின் இயக்கப் போராளியும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறைமீண்ட போராளியுமான _அமரர்.வே.சிவா அவர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதியாக, புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சார்பாக நேற்று (7.9.19) ரூ.4,00,000/- வழங்கப்பட்டது_ நெகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது. இதில் பங்களிப்பு செய்த புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தோழர்கள் அனைவருக்கும் மாநில மையத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*
*⚔*
*🛡தனி சங்கப் போராட்டம், ஜாக்டோ ஜியோ போராட்டம், இந்திய பள்ளி ஆசிரியர் (STFI) கூட்டமைப்பின் போராட்டம் என்று எத்தகைய போராட்டமாக இருந்தாலும் களத்தில் முன்னணியில் நிற்பவர்கள் நம் பேரியக்கத் தோழர்கள் என்று எப்போதும் போல் இப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.*
*⚔*
*🛡மாநில அமைப்பு அறிவித்துவிட்டால் எத்தகைய இடர் இருப்பினும் அதனைத் தாங்கிக் கொண்டு களத்தில் நிற்பதில் நிகரற்றவர்கள் நம் இயக்கத் தோழர்கள். இதைத்தான் நம் முன்னோர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை 'MILITANT ORGANIZATION' என்று ஆங்கிலத்தில் அடிக்கடி கூறுவார்கள்.*
*⚔*
*🛡09.09.2019-ல் மாவட்டத் தலைநகரங்களில் STFI சார்பில் நடைபெற உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற வைப்பது நம் பேரியக்கத் தோழர்களின் தலையாயக் கடமை என்பதை மீண்டும் நினைவூட்டுவது மாநிலத்தின் கடமையாகும்.*
*⚔*
*🛡தொடர் தாக்குதல்கள். . . தொடர் அச்சுறுத்தல்கள். . . தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகள். . . அவமானங்கள். . . இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் ஒரே ஆயுதம் 'தொடர் போராட்டம்' மட்டுமே! இதற்குப் பொன்னாடையும் பூங்கொத்தும் ஒருபோதும் பயன்படாது என்பதே தொழிற்சங்க வரலாறு.*
*⚔*
*🛡தமிழ்நாட்டின் பொதுக்கல்வி குறிப்பாக, தொடக்கக் கல்விக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 'தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு' மிகப்பெரிய அபாயத்தை கொண்டு வர இருக்கிறது.*
*⚔*
*🛡அரசு ஆரம்பப் பள்ளிகளை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. எனவே தான், நம் பேரியக்கம் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ்நாட்டின் 6 முனைகளிலிருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை 25.9.2019 முதல் 29.9.2019 முடிய நடத்த உள்ளது.*
*⚔*
*🛡29.9.2019 அன்று மாலை பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் பிரச்சார நிறைவுக் கூட்டம் கரூர் மாநகரில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றிட உள்ளனர்.*
*⚔*
*🛡மேற்படிப் பிரச்சாரப் பயணத்தைத் திட்டமிட தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களிலும் மாநில பொதுக்குழுவில் இடம்பெறும் நம் இயக்கத் தோழர்கள் பங்கேற்கும் பிரச்சாரப் பயணத் திட்டமிடல் கூட்டங்கள் இன்று (08.09.19) நடைபெற உள்ளது.*
*⚔*
*🛡இக்கூட்டங்களில் நம் இயக்கத் தோழர்கள் தவறாது கலந்து கொண்டு பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உரிய ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை நல்கிட வேண்டும்.*
*⚔*
*🛡இன்றைய கூட்டத்தில் 25.09.2019 அன்று பிரச்சார பயணத்தை தொடங்கும் இடம், மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள், பிரச்சாரப் பயணத்தின் வழித்தடம், வாகன ஏற்பாடு, காவல்துறை அனுமதி, பிரச்சார வாகனத்தில் பயணிக்கும் தோழர்கள், துண்டுபிரசுரம், சுவரோட்டி, கரூர் கூட்டத்திற்கு ஆசிரியர்களை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாகத் திட்டமிட்ட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*
*⚔*
*🛡இயக்க வரலாற்றில் இடம்பெறப்போகும் பிரச்சாரப் பயணம் பொதுக் கல்வியைப் பாதுகாக்கும் பயணமாக அமைய களம் அமைப்போம்!*
*சென்னை.*
*08.09.2019*
🤝தோழமையுடன்,
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment