Thursday, 10 October 2019

*NHIS - மறுப்பு தெரிவித்த நிர்வாகம் - மாற்றிக்காட்டிய TNPTF*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/10/nhis-tnptf.html


*_TNPTF தொடரும் அசாத்திய சாதனைகள்_*

*🚗சிவகங்கை மாவட்டம், _சிங்கம்புணரி வட்டாரக்கல்வி அலுவலர் திரு.ஜேம்ஸ்_  அவர்கள் தனது குடும்பத்துடன் கடந்த 6.10.2019 அன்று தனது சொந்த மகிழுந்தில் வேளாங்கண்ணி சென்று கொண்டிருக்கையில் காளையார்கோயில் அருகே வானகம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.*

*_திரு.ஜேம்ஸ் அவர்களுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது._*

*🚑உடனடியாக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி செய்யபப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.*

*💪சிகிச்சை செலவாக _ரூபாய் 71 ஆயிரத்தை_ மருத்துவமனை கோரியது. _இன்சூரன்ஸ் நிறுவனம் 20 ஆயிரம்_ மட்டுமே தர முன் வந்தது.*

*💪இதில் தலையிட கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட மையம் மூலம் மாநில அமைப்பிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.*

*💪 _மாநில அமைப்பு உடனடியாக தலையிட்டு பல்வேறு முயற்சிகளுக்கு இடையில் மொத்த சிகிச்சை செலவான ரூபாய் 71 ஆயிரத்தை பெற்றுக்கொடுத்து ஒரு பைசா செலவில்லாமல்_ வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் இல்லம் திரும்ப வழிவகை செய்தது.*

*🙏மாவட்ட அமைப்பின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட மாநில அமைப்பிற்கும், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் _தோழர்.செல்வகணேஷ்_ அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட மையத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.*

🤝தொடர்ந்து இயக்க பணியில்...

*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச்செயலாளர்*
*💪TNPTF💪*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: