Thursday, 10 October 2019

*சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலரின் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து இயக்க நடவடிக்கை TNPTF சிவகங்கை மாவட்ட அறைகூவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/tnptf.html


**
*🛡திருப்புவனம் வட்டார செயலாளர் திரு.சத்தியேந்திரன் அவர்களுக்கு அரசியல் அழுத்தம் என்ற பெயரில் விதிகளுக்கு முரணாக பணியிட மாறுதல் வழங்குவதில் முனைப்பு காட்டும் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு எதிராக இயக்க நடவடிக்கைகயை உறுதியாக மேற்கொள்ள மாநில மையம் வழிகாட்டியுள்ளது. மாநில அமைப்பின் வழிகாட்டுதல் படி இன்று (10.10.2019) மாலை 5.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகத்தில் அனைவரும் ஒன்று கூட கேட்டுக்கொள்கிறோம்.*

**
*🛡இதில் _அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் தவிர்ப்பின்றி பங்கேற்க வேண்டும். மேலும் திருப்புவனம், சிவகங்கை, காளையார்கோயில்_ ஒன்றிய ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.*

**
*🛡அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு சாதகமானவர்களை காப்பாற்ற துடிப்பதோடு அனைத்து விதி மீறல்களிலும் அரசியல் தலையீடு என்று காரணம் கூறி தன்னுடை பதவிக்கு களங்கம் விளைவிக்கும் மாவட்ட கல்வி அலுவலரை ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் எதிர்கொள்ள ஒன்று கூடுவோம்.*

*_அநீதி களைய அனைவரும் ஒன்று கூடுவோம்._*

🤝தோழமையுடன்;

*_மாவட்ட மையம்_*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*சிவகங்கை மாவட்டம்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: