🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/5-8.html
*✍தேசியக் கல்விக் கொள்கை, பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவதையும், கல்வி பெறாத சமூகத்தை உருவாக்குவதையுமே நமக்கு அளிக்க இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெண்கள் கல்வி கற்க பள்ளி செல்ல முடியாத நிலையை மாற்ற போராடி பெற்றது பெண் கல்வி; இப்போது மீண்டும் பெண்கள் கல்வி கற்காத சூழலை உருவாக்கும் வகையில் தேசியக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.*
*✍ஏற்கனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கே மாணவர்கள், பெற்றோர்கள் உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எப்போதும் படிப்பு, மனப்பாடம், தேர்வு, டியூஷன் இப்படி அவர்களை வருத்தும்போது 3 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைக்குப் பொதுத்தேர்வு என்பதே பெரும் வன்முறை. பாடத்தைக் கடந்த பல திறன் கற்கும் வயதில் பரீட்சைக்கு மட்டுமே படி என அச்சுறுத்துவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது ?*
*✍மத்திய அரசு தனது கல்விக் கொள்கையில் மட்டும் தான் கூறியிருக்கிறது. ஆனால் தமிழக அரசு 5, 8 வகுப்புகளுக்குக் கல்வித்துறையின் மூலம் அரசாணையையே (Go -164) அறிவித்துவிட்டது. சரி, அப்படியே பொதுத்தேர்வை வைக்கட்டும். ஆனால் தொடக்கப் பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?*
*✍1- 5 வகுப்புகளுக்கும் சேர்த்து 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரியும் நிலை, பல பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே. இவை முறையே ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளி என நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு இவர்கள் நடத்த வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 23. இதுவே பெரிய சவாலாக இருக்கும் பட்சத்தில், அரசும் துறையும் கற்பித்தல் அல்லாத பணிகளையும் ஏராளமாக இவர்களுக்குத் தருகின்ற சூழலில், 5 ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்றால் எப்படி சாத்தியம்?*
*✍இந்த ஒரு மாதத்தில் 4 கல்விக் கொள்கை முடிவுகளைத் தமிழக அரசு நடைமுறைப் படுத்தியிருக்கிறது. பள்ளி இணைப்பு (Merging ), ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் (School complex), தன்னார்வலர்கள் வகுப்பெடுத்தல் (Volunteers), பொதுத்தேர்வு (Public Exam). விரைவில் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கவும் பொதுத்தேர்வு வரவிருக்கிறது.*
*✍ஒரு 'நீட்' தீர்வுக்கே அனிதா போல பலரையும் இழந்திருக்கிறோம். இன்னும் உயர் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு என்றால் எத்தனை பேரை நாம் இழப்பது?*
*✍அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் ஆசிரியர் குறைப்பு, பள்ளிகளை மூடுதல் போன்றவை நிகழ்வதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கல்வி வரலாற்றில் முன்னாள் முதல்வர் காமராசர் முயற்சியில் கட்டப்பட்ட பள்ளிகள் இன்று மூடப்படுகின்றன. எங்காவது ஒரு புதிய அரசுப்பள்ளி திறக்கப்பட்டது என சமீப காலங்களில் செய்தி வந்துள்ளதா? அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைய என்ன காரணம்? ஆண்டுதோறும் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் அரசு தானே?*
*✍சைக்கிள் புக முடியாத சந்துகளில் கூட தனியார் பள்ளிகளின் மஞ்சள் பேருந்துகள் நுழைந்துவிடும் சூழல், எல்லாக் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கு அள்ளிக் கொண்டு போய் விடுகின்றனர். அதையெல்லாம் நாம் நிறுத்த வேண்டாமா?*
*✍உலகின் வளர்ந்த நாடுகளில் எல்லாம் தாய்மொழி வழிக் கல்வியில் தான் குழந்தைகள் பயில்கின்றனர். ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் தான் கல்வி ஆங்கில வழி சிறந்தது என்ற ஒரு கற்பனை மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. இங்குதான் ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி, மாதம் ரூபாய் I0000 கட்டணம் செலுத்தும் ஒருவர் ஒரு பள்ளியில் ரூபாய் 50000 செலுத்த முடிந்த ஒருவர் வேறொரு பள்ளியில் ஒரு லட்சம் பணம் கட்டும் ஒருவர் இன்டர்நேஷனல் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.*
*✍ஜனநாயக நாட்டில் கல்வி இலவசமாகத் தரப்பட வேண்டும். ஆனால் இங்கு கல்வி காசுக்கு விற்கப்படுகிறது. இங்கு ஆங்கில வழிப் பள்ளிகள், தமிழ் வழிப் பள்ளிகள் இரண்டிலுமே லண்டனிலிருந்து யாரும் வந்து பாடம் நடத்தவில்லை,*
*✍தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் பாடம் நடத்துகின்றனர். இவை எல்லாம் புரியாத அடித்தட்டு மக்கள், தங்கள் குழந்தைகள் ஏதோ ஆங்கில வழியில் படித்தால் வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் என தாலியைக் கூட அடமானம் வைத்துத் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்களிடம் உண்மையை நாம் புரிய வைக்க வேண்டும் 1963 ஆம் ஆண்டு கோத்தாரி கமிஷன் நாட்டின் மொத்த வருமானத்தில் GDP என்பதில் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதி 6 சதவீதம் என்று சொன்னது. ஆனால், இன்று வரை கல்விக்கென முழுமையாக நிதி ஒதுக்கப்படவில்லை.*
*✍கல்விக்கு செலவு செய்ய அரசு தயாராகவும் இல்லை, பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தான் வலிமை வாய்ந்தவை. அக்குழுக்களில் (SMC-School Management committee) 50% பெண்களாக இருக்க வேண்டும். பெண்கள் தான் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும். அதன் வழியே பள்ளிப் பிரச்சனைகளைக் கேள்விக்குட்படுத்தல். உங்கள் ஊர் பள்ளிகளில் பெண்களை SMC உறுப்பினராக்க முயற்சி செய்ய வேண்டும்.*
*✍ஒரு ஆசிரியராக, என் குழந்தைக்கு தேசியக் கல்விக் கொள்கையே தேவையில்லை என்கிறேன். இந்த கோவை பகுதி மாணவர்க்கு ஒரு விதமான பாடத்திட்டம் தேவைப்படும். அதேபோல சென்னை பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வேறு விதமான தேவை இருக்கும். இவர்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு பாடத் திட்டம் தான் நடைமுறையில் வேண்டும். அதை விடுத்துப் பன்முகத்தன்மை கொண்ட பலவித இனம், பண்பாடு கொண்ட, பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தப் பரந்துபட்ட இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் எவ்வாறு பொருந்தும்? -மரணத்திற்கு தமிழகத்தை வட பீகார் மாநிலம் கல்வியில் பல நிலைகளில் பின் தங்கியிருக்கிறது. அங்கு கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பல படி நிலைகள் முன்னணியிலிருக்கும் தமிழகப் பள்ளி குழந்தைகளுக்கும் ஒரே விதமான பாட நூல், பாடத்திட்டம் என்பது எவ்வாறு சமமான கல்வியை தரும்*
*✍தொடர்ந்து நம் எதிர்வினையாற்ற வேண்டும் இது குறித்து பேச வேண்டும். கல்வியை நல்ல முறையில் அரசு தந்திருந்தால் பள்ளிக் கல்வியைப் பாதுகாக்க என ஒரு அமைப்பு தேவைப்பட்டிருக்குமா? தாய்மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, பொதுப் பள்ளி முறை, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பெண்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் தீர்மானங்களாக நிறைவேற்றி செயலாற்ற. வேண்டும்.*
*_நவம்பர் 2 மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மாணவிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம்_*
🤝தோழமையுடன்;
*_திருமதி.உமா,_*
*ஒருங்கிணைப்பாளர்,*
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.*
*ஒருங்கிணைப்பாளர்,*
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment