🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_10.html
*🛡மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 18/2019*
*_நாள்: 10.11.2019_*
*⚔*
*🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நீதிமன்ற உத்தரவின்படி குறைபாடுகளை நீக்கி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் நடத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.*

_இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:_
*⚔*
*🛡நிறுத்தி வைக்கப்பட்ட 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கலந்தாய்வு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 11.11.2019 முதல் 16.11.2019 முடிய நடைபெறுமென்றும், தொடக்கக் கல்விதுறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 18.11.2019 முதல் 21.11.2019 முடிய நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

*🛡அரசாணை (1டி) எண்: 218 (பள்ளிக்கல்வித்துறை) நாள்:20.06.2019ல் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் 'மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணியாற்றும் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் (01.06.2019 அன்றைய நிலையில்).*

*⚡உதாரணமாக 2018-2019 ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் 2020-2021 ஆம் கல்வியாண்டுவரை கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.*
*⚔*
*🛡தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய மேற்படி அரசாணையை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.*

*🛡அவ்வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான திருத்திய அரசாணை (1டி) எண்: 393 பள்ளிக்கல்வி (பக 5(1) துறை நாள்:04.10.2019ல் வழக்குத்தொடுத்தவர்களுக்கு மட்டும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.*
*⚔*
*🛡நீதிமன்றத்தின் உத்தரவை பொதுவானதாக ஆக்குவதுதான் நீதியின் பயன் அனைவருக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்யும். மூன்றாண்டுகள் நிபந்தனை என்பது தவறானது என்பதை நீதிமன்றம் ஏற்றே தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதன்பயன் அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைக்க பள்ளிக்கல்வித்துறை வழிவகை செய்வதுதான் சரியானதாக இருக்கும்.*

*🛡மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் நீதிமன்றம் சென்று பல ஆயிரங்கள் பணம் செலவழித்தால்தான் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. மேலும் இதுபோன்ற செயல்களால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நீதிமன்றம் நோக்கி செல்லக்கூடிய நிலையை பள்ளிக்கல்வித்துறையே ஏற்படுத்துகிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.*
*⚔*
*🛡மேலும், திருத்திய அரசாணையில் முற்றிலும் கண்பார்வையற்ற ஆசிரியர்கள் 40% மற்றும் அதற்குமேல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், சிறுநீரக, இதய அறுவைச்சிகிச்சை செய்துகொண்டோர் மற்றும் புற்றுநோயாளிகள் ஆகியோருக்கும் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது, இது வரவேற்கத்தக்கது.*

*🛡ஆனால், இதன் பலனை மேற்படி பிரிவினர் அனுபவிக்கமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காரணம் முதலில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி இவர்களுக்கு தவிர்ப்பு வழங்கப்படாததால் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியாத இப்பிரிவினர் மாறுதல் விண்ணப்பங்களை அப்போது அளிக்க இயலவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி திருத்திய அரசாணை வெளியிடப்பட்ட பின்பும் இவர்களுக்கு புதிதாக விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி இவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாதநிலை ஏற்பட்டுள்ளது.*

*🛡எனவே, பள்ளிக்கல்வித்துறை உடனடியாகத் தவிர்ப்பு வழங்கப்பட்டுள்ள மேற்படி பிரிவினரிடமிருந்து புதிய மாறுதல் விண்ணப்பங்களை பெற்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.*
*⚔*
*🛡மேலும், ஏற்கனவே கடந்த சூலை மாதம் நடைபெற்ற 2019-20 கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்றாண்டுகள் நிபந்தனையிலிருந்து விலக்குப் பெற்று நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் பெற்றவர்களுக்கு மாறுதல் ஆணைகள் இதுவரை வழங்கப்படாத நிலை தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உள்ளது. நீதிமன்ற ஆணையின் படி அவர்களுக்கு பணி மாறுதல் ஆணைகளை வழங்க தொடக்கக்கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*
*⚔*
*🛡மேலும், 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வேலூர் மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சூலை மாதம் நடைபெற்றுள்ளது. ஆனால் வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெறவில்லை.*

*🛡வேலூர் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை முதலில் நடத்தினால் தான் அதன் தொடர்ச்சியாக ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல், இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்த முடியும். எனவே தொடக்கக்கல்வித்துறை உடனடியாக அதற்குரிய ஆணையை வெளியிட வேண்டும்.*

*🛡மேலும், கடந்த சூலை மாதம் நடைபெற்ற கலந்தாய்விலும், அதற்கு முன்பும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யப்பட்ட உபரி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இக்கலந்தாய்வில் ஒன்றியத்திற்குள் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தவுடன் ஏற்படும் காலிப்பணியிடங்களை அளித்து அவர்கள் சொந்த ஒன்றியத்திற்குள் வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.*
*⚔*
*🛡மேற்படி குறைகளை நிவர்த்தி செய்து ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் நியாயமான, நேர்மையான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment