🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_98.html
*🎙உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் ஓரளவு முடிந்து விட்டதால், 1 வாரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.*
*🎙தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.*
*🎙ஆனால் மாநில தேர்தல் கமிஷன் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறது.*
*🎙அதற்கேற்ப உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் அட்டவணையை சமர்பிக்க 4 வார கால அவகாசம் கேட்டுள்ளனர்.*
*🎙தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை முடித்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் உள்ளது.*
*🎙அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான நடவடிக்கையிலும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.*
*🎙தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்.*
*🎙கிராம பஞ்சாயத்துக்களை பொறுத்தவரை ஓட்டு சீட்டு முறையில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.*
*🎙இதற்காக ஓட்டு சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு டெண்டர் விடப்படிருந்தது. அதன்படி காகிதம் கொள்முதல் செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.*
*🎙மின்னணு எந்திரங்களை கையாள்வது, தொடர்பாகவும் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.*
*🎙தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பெயர் விவரங்களும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.*
*🎙இந்த தேர்தலுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.*
*🎙உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடுபடி பட்டியலும் தயாரிக்கப்பட்டு முடிவு பெறும் தருவாயில் உள்ளது.*
*🎙உள்ளாட்சி அமைப்பின் 5 அடுக்கு முறைக்கு தேர்தல் நடைபெறும்போது 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதை செய்து கொடுக்க அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.*
*🎙தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் முடிவுபெறும் நிலையில் இருப்பதால் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.*
*🎙தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், ஓட்டுப்பதிவு நாள், ஓட்டு எண்ணிக்கை நாள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் 1 வாரத்தில் தாக்கல் செய்யும் என தெரிகிறது.*
*🎙அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதியை வெளிப்படையாக தேர்தல் கமிஷன் அறிவிக்கும். அனேகமாக 1 வாரத்தில் தேர்தல் தேதி தெரிந்து விடும்.*
_இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பின் உயர் அதிகாரி கூறியதாவது:_
*🎙உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.*
*🎙இந்த இட ஒதுக்கீடானது சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதை தவிர்த்து பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.*
*🎙இதன்படி மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.*
*🎙இந்த நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், மாவட்ட, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கிராம ஊராட்சி தலைவர், ஆகிய பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு படி பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.*
*🎙எனவே தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் ஓரளவு முடிந்து விட்டதால், 1 வாரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment