Tuesday 5 November 2019

*DIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு - மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய விருது - ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநர் முதல்வரிடம் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/diksha.html


*🌟புதுதில்லியில் (04.09.2019) அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும்  விழாவில், DIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால், அதனை பாராட்டும் விதத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநர் _திரு.ஆர்.சுடலைக்கண்ணன்_ , இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.11.2019) தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் _திரு.எடப்பாடி கே.பழனிசாமி_ அவர்களிடம்  காண்பித்து வாழ்த்து பெற்றார்.*

*🌟உடன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் _திரு.கே.ஏ. செங்கோட்டையன்_ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: