Saturday, 16 November 2019

*TNPTF - LKG & UKG ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள கோரிக்கை - நாளிதழ் செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/tnptf-lkg-ukg.html


**
*🛡L.K.G. & U.K.G. வகுப்புகளுக்கு கட்டாய பணியிடமாற்றம் செய்த ஆசிரியர்களை பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

**
*🛡தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறையில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். இந்தாண்டு பொது  தேர்தல் நடந்ததாலும், மாறுதல் அரசாணைகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடுத்திருந்ததாலும் கலந்தாய்வு தள்ளி போனது.*

**
*🛡தற்பொழுது நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னால் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நவம்பர் 11 முதல் எமிஸ் எனப்படும் இணையத்தளம் மூலம் நடந்து வருகிறது.*

**
*🛡தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நவம்பர் 18 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.*

**
*🛡இதில் தற்பொழுது உள்ள காலிப்பணியிடங்களை கண்டறிந்து மாறுதல் மற்றும் பதவி உயர்வு அளித்திட வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக அனைத்து விபரங்களும் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.*

**
*🛡இதில் நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகளுக்கு மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி அவர்களது விருப்பத்திற்கு மாறாக சில ஆசிரியர்கள் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்படும்பொழுது எவ்வித விதிகளும் பின்பற்றப்படாமல் உபரி ஆசிரியர் என்ற காரணம் காட்டி மாறுதல் வழங்கப்பட்டது.*

**
*🛡அவர்களை இந்த பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:_

**
*🛡நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டது வரவேற்க வேண்டிய செயலாக இருந்தாலும் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அவசர கோலத்தில் ஆரம்பிக்கப்பட்டதால் பல்வேறு குளறுபடிகளுடன் செயல்படுகிறது.*

**
*🛡இவ்வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி முடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்காமல் ஏற்கனவே பணியில் இருந்த இடைநிலை ஆசிரியர்களை எவ்வித முறையான விதிகளையும் பின்பற்றாமல் நிர்வாக மாறுதல் செய்தனர்.*

**
*🛡இதில் பணி மூப்போ அல்லது பணியிட மூப்போ கருத்தில் கொள்ளாமல் மாணவர் எண்ணிக்கையை மட்டும் காரணம் காட்டி அவர்களது விருப்பத்திற்கு மாறாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.*

**
*🛡தற்பொழுது அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் கோர இயலாது என தெரிவிக்கின்றனர். நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கடந்த காலங்களில் பொது மாறுதலில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.*

**
*🛡தற்பொழுது அந்த நடைமுறை மறுக்கப்படுவதால் பல ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.*

**
*🛡எனவே கல்வித்துறை மழலையர் வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களது நலன் கருதி திங்கள் கிழமை தொடங்கவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுவதோடு கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.*

🤝தோழமையுடன்;

*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: