🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/12/1-5-6-8.html
*✍கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் ஆங்கிலம் பேச்சு திறன் வளர்த்தல் கட்டகம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத தயாரிக்கப்பட்டது.*
*✍மேற்படி பணி முடிவுற்ற நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக் கருத்தாளர் களுக்கான மாநில அளவில் பயிற்சி 22.11.2019, 28.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய நாட்களில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள SIEMAT கருத்தரங்கு நடைபெற்றது.*
*✍மாவட்ட கருத்தாளர் களுக்கு மாநில கருத்தாளர்கள் கொண்டு 3.12.2019 ஆம் தேதி அன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கும், 6.12.2019 ஆம் தேதி அன்று ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கும் மாவட்ட அளவிலான பயிற்சியே நடத்தவும் மேலும் பயிற்சி நடத்துவதற்கு கீழ்க்கண்டவாறு உத்தேச செலவினமும். அனுமதிக்கப்படுகிறது.*
*✍மாவட்ட கருத்துக்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான ஒரு நாள் பயிற்சியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு 5.12.2019 முதல் 13.12.2019 முடியவும் மற்றும் 6 முதல் 8ஆம் வகுப்பிற்கான ஒருநாள் பயிற்சியை 16.12.2019 முதல் 23.12.2019 முடிய நடத்தவும் மேற்படி ஆங்கிலப் பேச்சுத் திறன் வளர்த்தல் சார்பான பயிற்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செய்திட அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
*✍வட்டார அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடத்துவதற்கு தேவையான செலவின விபரம் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
*✍அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திட்டமிடுதல் மற்றும் செயல்பாடுகள் நிதியிலிருந்து பீச் செலவினங்களை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
*✍அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்ச்சிக்கான திட்டமிடல் கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கா வண்ணம் இப்பயிற்சியினை அளித்திடவும் அறிவுறுத்தப்பட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment