Monday, 2 December 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக திட்மிட்படி பெருந்திரள் முறையீடு நடைபெறும் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/12/blog-post_2.html


*பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை எண் 32/2019,  நாள் 2/12/2019*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே_ வணக்கம்*

**
*🛡17 11 2019 அன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நம் பெயர் இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில பொதுக்குழு முடிவின்படி 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு பிரச்சார இயக்கமும் அலுவலகங்களில் "பெருந்திரள் முறையிடு"  போராட்டமும் நடத்துவதற்குரிய களப்பணிகளை மாநிலம் முழுவதும் நம் பேரியக்கத்தின் மாவட்ட வட்டார நகர கிளை பொறுப்பாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்*

**
*🛡இந்நிலையில் தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இன்று 2.12.2019 அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் நம்முடைய போராட்ட நடவடிக்கைகள் தொடருமா என்ற ஐயம் ஒருசில நம் இயக்கத் தோழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.*

**
*🛡மேற்கண்ட நம்முடைய போராட்ட நடவடிக்கைகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்கு வித தொடர்பும் இல்லை நடத்தை விதிகள் இதில் குறுக்கிட எவ்விதத்திலும் வாய்ப்பில்லை காரணம் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் நாம் நடத்தவுள்ள "ஆசிரியர் சந்திப்பு பிரச்சார இயக்கம்" என்பது பள்ளிகள் மற்றும் வீடுகளில் ஆசிரியர்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வாகும்.*

**
*🛡மேலும் 5 12 2019 மாலை நடைபெற உள்ள "பெருந்திரள் முறையீடு" என்பதும் பெரும் திரளாக சென்று வட்டார கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை முழக்கமிட்டு விளக்கிப் பேசி வட்டார கல்வி அலுவலரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் நிகழ்வாகும்.  மேற்படி நிகழ்வுகள் மாநிலம் தழுவிய நிகழ்வுகளாகும்.*

**
*🛡எனவே தேர்தல் நடத்தை விதிகள் நம் இயற்கை நிகழ்வுகளுக்கு தடையாக இல்லை என்பதால் மாநில மாவட்ட வட்டார நகர பொறுப்பாளர்கள் ஏற்கனவே திட்டமிட்டவாறு களப் பணிகளை தொடருமாறு மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது சமூக வலைதளங்களில் இது தொடர்பாக தேவையற்ற தகவல்களை பதிவிட வேண்டாம் எனவும் தோழமையுடன் மாநில மையம் கேட்டுக் கொள்கிறது.*

🤝தோழமையுடன்; 

*_ச.மயில்,_*
*பொதுச் செயலாளர்,* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: