Saturday, 14 December 2019

*இயக்கத்தின் ஆவணமாய், அடையாளமாய், வரலாற்றுப் பெட்டகமாய், வான் மழையாய், போர்வாளாய், கூர்வாளாய், உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகமாய், நன்மையை நயம்பட எடுத்துரைக்கும் நல்லேடாய் நாளை வெளிவரும் நம் இயக்க இதழ் "TNPTF ஆசிரியர் முழக்கம்" இயக்க இதழ் வெளியீட்டு விழா - TNPTF மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/12/tnptf-tnptf_14.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்  : 34/2019  நாள்  : 14.12.2019*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*🗞நம் பேரியக்கத்தின் போர்வாளாய் இயக்க இதழ் ''TNPTF ஆசிரியர் முழக்கம்" 52 பக்கங்களுடன், மாத இதழாய், வண்ணப்புத்தகமாய் நம் எண்ணப் புத்தகமாய் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணிலே நாளை (15.12.2019) வெளியிடப்படுகிறது. இயக்க வரலாற்றில் முத்திரை நிகழ்வான இதில் பங்கேற்க மாநிலம் முழுவதுமிருந்து நம் பேரியக்கத் தோழர்கள் வருகை தருகிறார்கள்.*

*🗞விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை நம் பேரியக்கத்தின் மதுரை மாவட்டக்கிளைத் தோழர்கள் சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். விழாவில் பங்கேற்க நம் முன்னத்தி ஏர்களான நம் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர்கள், முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர்கள், முன்னாள் மாநிலப் பொருளாளர்கள் உட்பட நம் இயக்கத்தின் மூத்த தோழர்கள் மதுரை மாநகருக்கு வருகை தருவது நமக்கெல்லாம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும், உந்துதலையும் தரக்கூடிய நிகழ்வாகும். அவர்களது அனுபவ உரைகள் நமக்கெல்லாம் புத்தெழுச்சியைத் தரக்கூடிய, புத்தொளி பாய்ச்சக்கூடிய, புதுத்தெம்பைத் தரக்கூடியதாக அமையவிருக்கிறது.*

*🗞இயக்கத்தின் ஆவணமாய், அடையாளமாய், வரலாற்றுப் பெட்டகமாய், வான் மழையாய், போர்வாளாய், கூர்வாளாய், உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகமாய், நன்மையை நயம்பட எடுத்துரைக்கும் நல்லேடாய் நாளை வெளிவரும் நம் இயக்க இதழ், இயக்கத்தின் எழுச்சி மிகு நிகழ்வுகள், தலைவர்களின் கட்டுரைகள், முன்னாள் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள், அலுவலர்களின் சந்திப்புக்கள், கல்வி தொடர்பான கருத்துரைகள், அறிய வேண்டிய அரசாணைகள், பெண்ணுரிமைக் கருத்துக்கள், கவர்ந்திழுக்கும் கவிதைகள், மருத்துவக்காப்பீட்டுத் திட்டச் செய்திகள், தேசிய கல்விக்கொள்கை சார்ந்த கருத்துக்கள், மாநிலப் பொதுக்குழு முடிவுகள், மாவட்டங்களின் இயக்க நிகழ்வுகள், பணி தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் சுழல் விளக்கு உள்ளிட்ட பல்வேறு செய்திகளுடன் முற்றிலும் வண்ணப்படங்களுடன் ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக வெளிவருகிறது.*

*🗞இயக்க இதழை தமிழ்நாட்டில் தாய்த்தமிழின் வளர்ச்சிக்கு தன்னிகரற்ற தொண்டைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவரும், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க  எழுத்தாளர்களில் ஒருவருமான தோழர். ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியிட்டு உரையாற்றுவது இயக்க இதழுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.*

*🗞இயக்க இதழ் வெளியீட்டு விழாவில் பங்கேற்க நம் இயக்கத் தோழர்கள் அனைவரையும் மாநில மையம் வாஞ்சையுடன் அழைக்கிறது. எத்தனை முக்கியப் பணிகள் இருப்பினும் எப்படியேனும் வரலாற்று நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பை நம் இயக்கத் தோழர்கள் உருவாக்கிக் கொள்ள மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*🗞மாநிலம் முழுவதும் சில மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நாளை (15.12.2019) நடைபெற உள்ளது. அம்மாவட்டங்களைச் சேர்ந்த நம் இயக்கத் தோழர்கள் எவ்வகையிலேனும் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சில மாவட்டங்களில் இன்று (14.12.2019) தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. மேலும் 9 மாவட்டங்களிலும், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை. எனவே, அப்பகுதிகளில் உள்ள நம் இயக்க உறுப்பினர்கள் பெருமளவில் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க மாநில மையம் அன்புடன் அழைக்கிறது.*

*🗞இதழ் வெளியீட்டு விழா நாளை (15.12.2019) சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணிக்குள் நிறைவு பெற்றுவிடும் என்பதால் தோழர்கள் குறித்த நேரத்திற்குள் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*

*🗞"TNPTF ஆசிரியர் முழக்கம்" இயக்க இதழ் ''ஆயுள் சந்தா" ரூ.2000/- ஆகும். விழா நகழ்வின்போது ஆயுள் சந்தாக்களை அளிக்கும் ஏற்பாட்டோடு மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் வருகை தருவது இதழுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமையும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: