🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/12/tnptf_15.html
*🗞தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொள்கைகளை, குறிக்கோள்களை, இலட்சியங்களைத் தாங்கி, இயக்கத்தின் போர்வாளாய் மாதமிருமுறை வந்துகொண்டிருந்த "ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி" என்னும் இயக்க இதழை மாநில பொதுக்குழு முடிவின்படி மாதமொருமுறை இதழாய், புத்தக வடிவில் கூடுதல் பக்கங்களுடன் _"TNPTF ஆசிரியர் முழக்கம்"_ என்ற பெயரில் வெளியிடும் நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க மதுரை மாநகரில், காக்கா தோப்பு தெருவில் அமைந்துள்ள மூட்டா அரங்கில் (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.*
*🗞இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*🗞மாநில துணை பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ அவர்களும், STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர். ச.மோசஸ்_ அவர்களும் முன்னிலை வகித்து எழுச்சி உரை ஆற்றினார்கள்.*
*🗞மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.*
*🗞தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் _எழுத்தாளர்.திரு.ச.தமிழ்ச்செல்வன்_ அவர்கள் _"TNPTF ஆசிரியர் முழக்கம்"_ இதழை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.*
*🗞தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில பொதுச்செயலாளர்களும், இயக்க இதழின் முன்னாள் இதழாசிரியர்கள்*
*⚡ _தோழர்.செ.நடேசன்,_ அவர்களும்,*
*⚡ _தோழர். ந.பர்வதராஜன்,_ அவர்களும்,*
*⚡ _தோழர்.செ.போத்திலிங்கம்,_ அவர்களும்,*
*⚡ _தோழர்.செ.பாலசந்தர்,_ அவர்களும்,*
*புதிதாக வெளியிட்ட இதழைப் பெற்றுக்கொண்டார்கள்.*
*🗞மாநில பொருளாளர் _தோழர். க.ஜோதிபாபு_ அவர்கள் நன்றியுரை கூறினார்.*
*📰படியுங்கள்*
*_இயக்கத்தின் போர்வாள்_*
*"TNPTF ஆசிரியர் முழக்கம்"*
*_இயக்கத்தின் போர்வாள்_*
*"TNPTF ஆசிரியர் முழக்கம்"*
_ஆண்டுச் சந்தா ரூ.200/-_
_ஆயுள் சந்தா ரூ.2000/-_
_ஆயுள் சந்தா ரூ.2000/-_
No comments:
Post a Comment