Saturday 18 January 2020

*5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை மாணவர் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை மாணவர் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 01/2020  நாள்: 18.01.2020*

**
*🛡5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை  மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் மதுரையில் நடைபெற்றது.*

**
*🛡மதுரை மாவட்டச்செயலாளர் _க.ஒச்சுக்காளை_ வரவேற்புரையாற்றினார்.*

**
*🛡மாநிலப் பொருளாளர் _க.ஜோதிபாபு_ வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.*

**
*🛡வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும், இயக்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரையாற்றினார்.*

**
*🛡ஜாக்டோ ஜியோ நடவடிக்கைகள் குறித்து அதன் நிதிக்காப்பாளர் _ச.மோசஸ்_ எடுத்துரைத்தார்.*

**
*🛡கூட்டத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இத்தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இடைநிற்றல் அதிகரிக்கும். இதனால் மாநிலத்தின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவேதான் கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பைப் தெரிவித்து வருகின்றனர்.*

**
*🛡ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் நலன்கருதி கொண்டு வரப்பட்ட திட்டம். எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டம். எனவே, தமிழக அரசு  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்னும் திட்டத்தை மாணவர்களின் நலன் கருதி உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

**
*🛡மேலும், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட தேர்வு மையங்களாக உள்ள அவரவர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், 5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சில மாவட்டங்களில் கல்வித்துறை அலுவலர்கள் கூறுவதும், 10, 15 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்களை அமைப்பதும் தவறானதாகும். எனவே இதுபோன்ற நடைமுறைகளை கல்வி அலுவலர்கள் கைவிடவும் மாநிலச்செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.*

**
*🛡ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.*

**
*🛡துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.*

**
*🛡கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*
      
🤝தோழமையுடன்;
   
*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்*                   *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
                                                    
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: