*எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழக பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*⚔*
*🛡தமிழக நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பண்ணீர்செல்வம் பிப்ரவரி 14 அன்று சட்ட பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் கல்வித்துறைக்கு ரூ.3,4181.73 கோடியை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் ஆசிரியர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.*
_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_
*⚡மாநிலத் துணைத்தலைவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_*
*⚡மாவட்ட தலைவர் தாமஸ் _தோழர்.அமலநாதன்,_*
*⚡மாவட்ட செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்,_*
*⚡மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி,_*
*⚡மாவட்ட பொருளார் _தோழர்.குமரேசன்,_*
_ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;_
*⚔*
*🛡தமிழக அரசு வெளியிட்டுள்ள கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக நிதி ஒதுக்கியிருந்தாலும், எங்கள் எதிர்பார்ப்பு அதிகமாகயிருந்த நிலையில் பல்வேறு ஏமாற்றங்களே மிஞ்சியுள்ளது. கடந்த 2019 ஜனவரி ஜாக்டோ ஜியோ முன்னெடுத்த போராட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கான தொகை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம். இந்த பட்ஜெட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்திட அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றத்தை தருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த புதிய பென்சன் திட்ட ஆய்வு கமிட்டியின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த அறிக்கை குறித்த எவ்வித அறிவிப்பையும் அரசு இது வரை வெளியிட வில்லை. இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.*
*⚔*
*🛡மேலும் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக பல ஆயிரம் ஆசிரியர்கள் பதவி உயர்வை இழந்துள்ளார்கள். ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் பெற இயலாத நிலையில் உள்ளனர். சிறை சென்ற ஆசிரியர்கள் மீதுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படாமல் உள்ளது. மேற்கண்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ஊழியர்களிடமும் உள்ளது. கடந்த இரண்டு ஊதியக்குழுவிலும் வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்காதது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில் பெருமபாலான ஆரம்பப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் வெளியிடப்படாததால் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
_🤝இப்படிக்கு;_
*_முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச்செயலாளர்*
*சிவகங்கை மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment