*💊மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவில்லை - திட்டத்தை கைவிட்டதா சுகாதாரத் துறை?*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*💊தேசிய குடற்புழு நீக்க நாளான நேற்று (10.02.2020) தமிழகத்தில் மாணவர்களுக்கு மாத்திரை விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், இத்திட்டத்தை சுகாதாரத்துறை கைவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.*
*💊சுகாதாரமற்ற பழக்க வழக்கம், அசுத்தமான உணவுகளை உண்பது, திறந்த வெளியில் மலம் கழிப்பது போன்ற காரணங்களால் குடற்புழுக்கள் உருவாகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்தச்சோகை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்க தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது அன்றைய தினம் நாடு முழுவதும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு _அல்பெண்டசோல்_ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.*
*💊இதற்காக அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் நடத்தி மாத்திரைகள் வழங்கப்படும். அன்றைய தினம் விடுபட்டவர்களுக்கு நான்கு நாட்கள் கழித்து குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.*
*💊ஆனால் இந்த ஆண்டு நேற்று (10.02.2020) தேசிய குடற்புழு நீக்க நாளில், பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படவில்லை. இதனால் இந்த திட்டத்தை சுகாதாரத்துறை கைவிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.*
*💊சுகாதாரத் துறையினர் கூறுகையில், பள்ளிகளுக்கு குடற்புழு நீக்க நாளில் மாத்திரைகள் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறினர்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment