Thursday 13 February 2020

*⚫😢⚫TNPTF மாநிலச் செயலாளர் தோழர்.இ.வின்சென்ட் அவர்கள் மறைவு-ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - மாநில மையம் இரங்கல் செய்தி*

*⚫😢⚫TNPTF மாநிலச் செயலாளர் தோழர்.இ.வின்சென்ட் அவர்கள் மறைவு-ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - மாநில மையம் இரங்கல் செய்தி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*⚫தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் அன்புத் தோழர்.இ.வின்சென்ட் அவர்கள் நேற்று (12.02.2020) இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் காலமானார் என்பதைப் பெரும் துயரத்துடன் மாநில மையம் தெரிவித்துக் கொள்கிறது*

*⚫கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம் இயக்கத்தை உயிர் மூச்சாய் எண்ணி, தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நலன்களுக்காக ஓய்வின்றி உழைத்த உன்னதத் தோழர்  நிரந்தரமாய்த் துயில் கொண்ட செய்தி இரவு நேரத்தில் இடியெனத் தலையில் இறங்கியது*

*⚫கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வட்டார அளவில், மாவட்ட அளவில் பல்வேறு இயக்கப் பொறுப்புக்களை ஏற்றும், கடந்த மூன்று முறை தொடர்ந்து மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தும் இணையற்ற வகையில் இயக்கப் பணியாற்றிய மகத்தான தோழர் இ.வின்சென்ட் அவர்கள்*

*⚫தனக்குக் கொடுக்கப்பட்ட இயக்கப் பணியைப் உணர்வுப் பூர்வமாகவும், பொறுப்புணர்வோடும் செயலாற்றிய தன்னிகரற்ற இயக்கப் போராளி*

*⚫அன்பும், அடக்கமும் கொண்டவராய்,சக தோழர்களிடம் அதிர்ந்து பேசாதவராய், இயக்க நிகழ்வுகளில் சமரசமற்ற களப் போராளியாய், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு கொண்டவராய் விளங்கியவர் நம் தோழர் இ.வின்சென்ட் அவர்கள்*

*⚫கல்விப் பணியையும், இயக்கப் பணியையும் இரு கண்களாகப் பாவித்து இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கு இலக்கணமாய், எடுத்துக்காட்டாய் விளங்கிய நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர் நம்மை விட்டு நிரந்தரமாய்ப் பிரிந்து விட்டார்*

*⚫மாநில அமைப்பின் அனைத்து நிகழ்வுகளிலும் நம்மோடு இணைந்து இடையறாது பயணித்த நம் அன்புத் தோழரின் நினைவுகள் நெஞ்சை உலுக்குகிறது*

_"சாவே உனக்கோர் சாவு வராதா"என்ற கவிஞனின் வரிகளே நினைவுக்கு வருகிறது_

*⚫தோழர்.வின்சென்ட் அவர்கள் முன்னெடுத்த இயக்கப் பணிகளை, சமூகப் பணிகளை அவரது வழியில் தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்*

_😢மாநில மையத்தின் சார்பில்-ஆறாத்துயருடன்._

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: