Saturday 29 February 2020

*பாராளுமன்றத்தை நோக்கி ஆசிரியர் கூட்டமைப்பு பேரணி*

*பாராளுமன்றத்தை நோக்கி ஆசிரியர் கூட்டமைப்பு பேரணி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🚶‍♂️🚶‍♀️டில்லியில் மார்ச் 19ல் பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடைபெற உள்ளதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_ தெரிவித்தார்.*

*🚶‍♂️🚶‍♀️இந்தியாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அவர்கள் ஓய்வூதியம் பெறமுடியால் அவதிப்படுகின்ற னர்.*

*🚶‍♂️🚶‍♀️பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.*

*🚶‍♂️🚶‍♀️இதன் தொடர்ச்சியாக தலைநகர் டில்லியில் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஊர்வலம் நடக்க உள்ளது.*

_இது குறித்து இந்திய, பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் கூறியதாவது:_

*🚶‍♂️🚶‍♀️மத்திய அரசு கல்விக்கான நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை திரும்பபெற வேண்டும்.*

*🚶‍♂️🚶‍♀️பல்வேறு மாநிலங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.*

*🚶‍♂️🚶‍♀️இதற்கு மார்ச் 19 ல் டில்லியில் பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடக்க உள்ளது.*

*🚶‍♂️🚶‍♀️முடிவாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.*

*🚶‍♂️🚶‍♀️தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்பர், என்றார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: