Saturday 29 February 2020

*அரசுப்பள்ளியில் அனைத்தும் இலவசம் திரைப்படம் பார்க்க பத்து ரூபாயா - பெற்றோர் அதிருப்தி - வட்டாரக் கல்வி அலுவலரின் பேட்டி*

*அரசுப்பள்ளியில் அனைத்தும் இலவசம் திரைப்படம் பார்க்க பத்து ரூபாயா - பெற்றோர் அதிருப்தி - வட்டாரக் கல்வி அலுவலரின் பேட்டி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎞️பள்ளிகளில் மாணவர் களுக்கு, திரைப்படம் திரையிட்டுகாட்ட, மாணவர்களிடம் பத்து ரூபாய் வசூல் செய்வது பெற் றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.*

*🎞️சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்புத்துார் கல்வி மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகளின் உலகம்' என்கிற திரைப்படம் காட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

*🎞️பள்ளி வளாகத்திலேயே  'குழந்தைகள் உலகம்' என்ற திரைப்படம் திரையிட மாணவர் ஒருவருக்கு பத்து ரூபாய் வசூல் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*

*🎞️மாணவர்களுக்கு அரசு சார்பில், பள்ளியில் உணவு, உடை, புத்தகம், லேப்டாப், சைக்கிள் வரை அனைத்தும் இலவசமாக வழங்கி வரும் நிலையில், திரைப்படம் காட்ட பத்து ரூபாய் வசூல் செய்வது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.*

*🎞️மேலும், ஆகஸ்ட் 2019 முதல் மார்ச் 2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஆணை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ளது.*

*🎞️இதனால்,படம் திரையிடப்பட்ட பள்ளிகளில் மீண்டும் படத்தை திரையிட்டு வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.*

_தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் பரிமளம் கூறுகையில்;_

*🎞️ஆண்டுதோறும், மாண வர்களுக்கு குழந்தை களுக்கான திரைப்படம் காண்பிக்கப்படும். மாணவர்களிடம் பத்து ரூபாய் வாங்குவது குறித்து தெரி யாது. கலெக்டர் உத்தரவு போட்டிருக்கிறார். நான் பள்ளிகளில் தகவல் அனுப்பியிருக்கிறேன். வேறொன்றும் எனக்கு தெரியாது, என்றார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: