Saturday, 7 March 2020

*STFI டெல்லி பேரணி - பயண வழித்தடம் மாற்றம் : TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

*STFI டெல்லி பேரணி - பயண வழித்தடம் மாற்றம் : TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 04/2020*
*நாள்: 06.03.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்!*

**
*🛡 இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள JFME (Joint Forum For Movement on Education) என்னும் அகில இந்திய அளவிலான கூட்டமைப்பின் சார்பில் 19.03.2020 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இருநூறுக்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.*

**
*🛡 அதே போன்று தமிழ்நாட்டில் STFI-ல் இணைந்துள்ள தோழமைச் சங்கங்களும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை இப்பேரணியில் பங்கேற்கச் செய்திட களப் பணிகளை ஆற்றி வருகின்றன.*

**
*🛡 தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தேசியக் கல்விக் கொள்கை – 2019 ஐ திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தேசநலன், ஊழியர் நலன், பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் இப்பேரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.*

**
*🛡 தமிழ்நாட்டில் 10,11,12 வகுப்புக்களின் பொதுத்தேர்வுக் காலமாக இருப்பதால் பேரணிக்கு வருகை தரவேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் நூற்றுக்கணக்கான நம் இயக்க உறுப்பினர்களால் பேரணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டு விட்டது என்பதே உண்மை.*

**
*🛡 இருப்பினும் பல்வேறு சிரமங்களையும் தாண்டி இருநூறுக்கும் மேற்பட்ட நம் இயக்கத் தோழர்கள் பேரணியில் பங்கேற்பது பாராட்டுக்குரியது.*

**
*🛡 பேரணிக்கு வருகை தரும் இயக்கத் தோழர்களின் கவனத்திற்கு. முதலில் பேரணிக்குச் செல்லும் அனைவரும் சென்னை சென்று அங்கிருந்து பெங்களூரு வழியாக கோவா - மும்பை வழியாக ரயில் மார்க்கமாக புதுதில்லி செல்வது என்று திட்டமிடப்பட்டிருந்தது.*

**
*🛡 தற்போது அதில் ஒரு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் தூரத்தில், நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும் என்பதால் நேரடியாக பெங்களூரு செல்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.*

**
*🛡 அதற்கான ரயில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. அப்பயணச்சீட்டுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு WhatsApp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.*

**
*🛡 எனவே, பேரணிக்கு வருபவர்கள் தங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து 12.03.2020 வியாழக்கிழமை பெங்களூருவுக்கு ரயிலில் பயணம் செய்ய வேண்டும்.*

**
*🛡 எனவே, ஏற்கனவே சென்னை செல்வதற்கு ரயிலில் அல்லது பேருந்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தவர்கள் தயவு செய்து அதை உடனடியாக ரத்து செய்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளவும்.*

**
*🛡 மேலும், 19.03.2020 அன்று பேரணி முடிந்து சென்னை திரும்புவதற்கு நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி விமானப் பயணச்சீட்டுக்கள் அனைவருக்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.*

**
*🛡 புதுதில்லிப் பேரணிக்கு வருகை தருபவர்களுக்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.10,000/- வீதம் மாவட்டச்செயலாளர்கள் ஏற்கனவே முன்பனம் செலுத்தியுள்ளனர். தற்போது மீதிப்பணத்தை பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டச்செயலாளர்கள் 09.03.2020 அன்று மதுரையில் நேரடியாக மாநிலப்பெருளாளர் வசமோ அல்லது 08.03.2020க்குள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாநில மையப் பொறுப்பாளர்கள் அல்லது மாநில துணைப்பொறுப்பாளர்கள் வசமோ தவறாது ஒப்படைத்திட வேண்டும்.*

**
*🛡 08.03.2020 அன்று நடைபெறும் மேற்கு மற்றும் வடமத்திய மண்டல ஆய்வுக்கூட்டங்களின் போது அந்தந்த மண்டலங்களில் உள்ள மாவட்டச்செயலாளர்கள் மேற்படி பணத்தை தவறாது செலுத்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

**
*🛡 பேரணி மற்றும் பயணத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. 'கொரானா" பீதி காரணமாக பயணத் திட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்குமா? என்று சில தோழர்கள் கேட்டு வருகின்றனர்.*

**
*🛡 'கொரானாவை விட கொடுமையானது CPS!
கொரானாவை விட மோசமானது தேசிய கல்வி கொள்கை – 2019!"
என்பதை நம் இயக்கத் தோழர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.*
 
**
*🛡 19.03.2020 புதுதில்லி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் நம் தமிழ் முழக்கம், உரிமை முழக்கமாய் ஒலித்திட புறப்படுவோம்... புதுதில்லி நோக்கி...*
                                                             
சென்னை.
06.03.2020

_🤝தோழமையுடன்,_

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: