*''கொரானா" பீதி -புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி STFI பேரணி தள்ளி வைப்பு - தனியாக விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்திருந்தவர்கள் உடனடியாக தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்ய கோரியும் - பொதுச்செயலாளர் சுற்றறிக்கை.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 05/2020 நாள்: 10.03.2020*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡நாம் எதிர்பாராத வகையில் 19.03.2020 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி STFI மற்றும் தோழமை அமைப்புக்கள் இணைந்து நடத்தவிருந்த பேரணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.*
*⚔*
*🛡'கொரானா" பாதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை, டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு உள்ளிட்ட மிக முக்கியக் காரணங்களுக்காக பேரணி ஒத்திவைக்கப்படுவதாக STFI ன் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் C.N.பார்தி நேற்று 09.03.2020 இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.*
*⚔*
*🛡எனவே, மேற்படி பேரணிக்குச் செல்வதற்காக நாம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த பயணத்திட்டத்தை தவிர்க்க இயலாத சூழலில் வேறு வழியின்றி மாநில மைய முடிவின்படி ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.*
*⚔*
*🛡கடந்த சில நாட்களாகவே இந்தியா முழுவதும் 'கொரானா" பாதிப்பு தொடர்பான அச்சமூட்டும் செய்திகள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. நம் பயணத்திட்டத்தில் இடம்பெற்ற கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களும் 'கொரானா" பீதியின் உச்சத்தில் உள்ளன. கோவா போன்ற வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் சுற்றுலாத் தளங்களும் வெறிச்சோடியுள்ளதாக செய்திகள் வருகின்றன.*
*⚔*
*🛡புதுதில்லியில் அரங்கக் கூட்டங்களுக்குக் கூட காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. நம்முடைய பயணத்திட்டத்தில் இணைந்த தோழர்களில் சிலரும் இத்தகைய நேரத்தில் இதுபோன்ற பயணத்திட்டம் சரியாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியதோடு, பயணத்திட்டத்தில் வருபவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கடந்த சில நாட்களாகக் கருத்து தெரிவித்தும் வந்தனர்.*
*⚔*
*🛡இத்தகைய சூழல்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டவாறு பயணத்திட்டத்தை மேற்கொள்வது என்ற முடிவில்தான் மாநில மையம் இருந்தது. காரணம் 182 பேருக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பே பெங்களூர் - கோவா – மும்பை – புதுதில்லி செல்வதற்கு ரயில் பயணச் சீட்டுகளும், புதுதில்லி - சென்னை விமானப் பயணச் சீட்டுகளும், சுற்றுலா இடங்களைப் பார்ப்பதற்கு 6 குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளும், தங்குமிடம் உள்ளிட்ட உணவுகளுக்கான ஏற்பாடுகளும் மதுரை ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் ஏஜென்ஸியால் செய்யப்பட்டுவிட்டன.*
*⚔*
*🛡இந்நிலையில் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. விமானப்பயண முன்பதிவுக் கட்டணம் உள்ளிட்ட சில முக்கிய முன்பதிவு கட்டணங்களை மீளப் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.*
*⚔*
*🛡நாம் எத்தனையோ முறை வடமாநிலங்களுக்கு இயக்க நிகழ்வுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருபோதும் இதுபோன்று பயணம் ரத்து செய்யப்பட்டதில்லை. முதன் முறையாக இது போன்ற சூழலைச் சந்தித்திருக்கிறோம் என்பதை நம் இயக்கத் தோழர்களின் கவனத்திற்கு மாநில மையம் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறது.*
*⚔*
*🛡இதுபோன்ற இக்கட்டான சூழலில் மாநில அமைப்பிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட தோழர்களை மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இது குறித்த விரிவான விவரங்கள் அடுத்த மாநிலச் செயற்குழுவில் தெரிவிக்கப்படும்.*
*⚔*
*🛡புதுதில்லி பயணத் திட்டத்தில் இணைந்திருந்த சில தோழர்கள் தனியாக விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் உடனடியாக தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்திடவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment