*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போராட்டக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*⚔*
*🛡கொடிய நோய்த்தொற்றான கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனா சமூகத் தொற்றாக மாறாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் தமிழ்நாடு முழுவதும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிப்பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளிலும் தன்னார்வலர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.*
*⚔*
*🛡இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு கொடிய கொரோனா நோய்த் தொற்றை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டிய கடமை நம் முன் உள்ளது.*
*⚔*
*🛡இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் கடந்த ஆண்டு 22.01.2019 முதல் 30.01.2019 முடிய நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி 26.11.2018 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(ஆ) நடவடிக்கைகள் மற்றும் காவல்துறையின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளான 6600 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நாளது தேதி வரை பணி ஓய்வு பெற இயலாமலும், பதவி உயர்வு போன்ற உரிமைகளைப் பெற இயலாமலும், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தமும், வேதனையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.*
*⚔*
*🛡எனவே, தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையிலும், இணக்கமான சூழலை ஏற்படுத்தும் வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் துயரத்தைப் போக்கும் வகையிலும் போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(ஆ) நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்து உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.*
_சென்னை_
_25.04.2020_
_🤝தோழமையுடன்;_
*_ச. மயில்_* _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment