Saturday 25 April 2020

நம் பேரியக்கத் தோழர்கள் சமூகப்பணியாம் உதவிப்பணிகளைக் கையிலெடுத்து களத்தில் இறங்கி செயலாற்றிக் கொண்டிருப்பது நம் பேரியக்கத்தின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது - பொதுச்செயலாளர் அறிக்கை*

நம் பேரியக்கத் தோழர்கள் சமூகப்பணியாம் உதவிப்பணிகளைக் கையிலெடுத்து களத்தில் இறங்கி செயலாற்றிக் கொண்டிருப்பது நம் பேரியக்கத்தின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


*_TNPTF மாநில மையச் செய்தி_*

*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:25.04.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்*

**
*🛡கொடிய நோய் கொரோனாவின் தாக்குதலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கல்விப்பணியிலும்,  இயக்கப்பணியிலும் எப்போதும்போல் இயங்குவதற்கு வாய்ப்பற்ற நிலையில் மாநிலம் முழுவதும் நம் பேரியக்கத் தோழர்கள் சமூகப்பணியாம் உதவிப்பணிகளைக் கையிலெடுத்து களத்தில் இறங்கி செயலாற்றிக் கொண்டிருப்பது நம் பேரியக்கத்தின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளது*

**
*🛡ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் என்னும் நம் இயக்க குறிக்கோள்களில் தற்போது சமூக நலனுக்காக முழுவதுமாகச் செயல்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது*

**
*🛡அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மாநிலம் முழுவதும் நம் இயக்கத் தோழர்கள் இயக்கப் பணிகளில் ஒன்றாம் சமூகப் பணியை காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செய்து கொண்டிருக்கும் செய்திகள் மலைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது*

**
*🛡மாதந்தோறும் நடைபெறும் நம் மாநிலச் செயற்குழு கடைசியாக 22.02.2020 அன்று மதுரையில் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களாக மாநிலச் செயற்குழு கூட்டம் உட்பட மாவட்ட கிளைகளின் கூட்டங்கள், வட்டார நகரக் கிளைகளின் கூட்டங்கள் எதுவுமே நடைபெற இயலாத நிலையில் இயக்கத் தோழர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கருத்துப்பரிமாற்றம் செய்வது என்பது இயலாத ஒன்றாகிவிட்டது*

**
*🛡காலச்சக்கரத்தின் இது போன்ற கடின நிகழ்வுகளில் கூட இயக்கப் பயணத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக்கிளை  வழிகாட்டி இருக்கிறது*

**
*🛡இன்று (25.04.2020) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கிளையின் ஆலோசனைக்கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நேரலையில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணி முதல் 12.15 மணி வரை நடைபெற்ற அக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கள்- வேலூர் மாவட்டத்தில் நம் இயக்கத்தின் சார்பில் நடைபெற்றுள்ள உதவிப் பணிகள் குறித்தும், எதிர்கால இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது*

**
*🛡ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கிளைக்கு மாநில மையத்தின் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!*

**
*🛡கடந்த 10 தினங்களாக நம் இயக்கத் தோழர்கள் மாநிலம் முழுவதும் ஆற்றிவரும் உதவிப் பணிகள் மூலம் வறிய மக்களுக்கு இதுவரை 60 லட்சம் ரூபாய்க்கு மேல் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் தொடர்ந்து உதவிப் பணிகள் நடைபெற இருக்கின்றன*

**
*🛡திண்டுக்கல் மாவட்டக் கிளை மட்டும் இதுவரை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உதவிப் பணிகளை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டக் கிளை 7 லட்சம் ரூபாய் அளவிற்கு உதவிப் பணிகளை இன்று முதல் முன்னெடுத்துள்ளது. பெரும்பாலான மாவட்டக் கிளைகள் ஒவ்வொன்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்களை வழங்கியுள்ளன*

**
*🛡நம் இயக்கத்தின் உதவிப் பணிகளை பல மாவட்டங்களில் அரசு உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ள செய்தி உதவிப் பணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது*

**
*🛡இன்று (25.04.2020) உதவிப் பணிகளில் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிய மாநில மையத்தின் கவனத்திற்கு வந்த மாவட்ட,வட்டார,நகரக் கிளைகள் பின்வருமாறு*

*⚡(1)  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்- (கடந்த 10 நாட்களாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உதவிப் பணிகள் நடைபெற்றுள்ளன)*

*⚡(2) தூத்துக்குடி மாவட்டம்- கோவில்பட்டி வட்டாரம்*

*⚡(3) கன்னியாகுமரி மாவட்டம்- ராஜாக்கமங்கலம் வட்டாரம், தோவாளை வட்டாரம்*

*⚡(4) திருவண்ணாமலை மாவட்டம்- போளூர் வட்டாரம், வெம்பாக்கம் வட்டாரம்*

*⚡(5) திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டாரம்*

*⚡(6) தஞ்சை மாவட்டம்- திருவிடைமருதூர் வட்டாரம், தஞ்சாவூர் நகரம்*

*⚡(7) திண்டுக்கல் மாவட்டம் -310 குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்*

**
*🛡தூய தொண்டால் இன்றைய பொழுதை அளந்த தன்னலமற்ற நம் பேரியக்கத் தோழர்களுக்கு மாநில மையத்தின் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!*

*_தொடரட்டும் தூய தொண்டு!_*
*_படரட்டும் தன்னிகரில்லா சேவை!_*
*_உயரட்டும் இயக்கப் பதாகை!_*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: