*🛡TNPTF உறுப்பினர்கள் போராட்டக்களத்தில் மட்டுமல்ல; சேவைபுரிவதிலும் சமரசமற்ற போராளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையச் செய்தி*
*பொதுச் செயலாளரின் கடிதம்:23.04.2020*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡கொரோனாவை அழித்தொழிக்கும் பணியில் தமிழக அரசும் அதற்கு உறுதுணையாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறை ஊழியர்களும் இரவு பகல் பாராது இடையறாது பணியாற்றி வருகின்றனர்*
*⚔*
*🛡தங்கள் உயிரைக் கொடுத்து மற்றவர்கள் உயிரை காக்கும் தியாக வேள்வியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. பொதுமக்களும் உண்மை நிலை உணர்ந்து,ஆபத்தின் தன்மை புரிந்து பெருமளவில் ஊரடங்கிற்கு தங்கள் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.இதனால் தமிழகத்தில் கொரோனா ஒரு சமூகத் தொற்றாய் மாறிவிடாமல் இதுவரை தடுக்கப்பட்டுள்ளது.*
*⚔*
*🛡ஊரடங்கால் வாடும் ஏழை மக்களுக்கு தமிழகம் முழுவதும் தொண்டுள்ளம் கொண்ட ஆயிரக்கணக்கானோர் உதவி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நம் பேரியக்கமாம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட,வட்டார,நகரக் கிளைகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயக்க நிர்வாகிகளும்,இயக்க உறுப்பினர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்*
*⚔*
*🛡இன்றும் (23.04.2020) தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உதவிப் பணிகளில் நம் இயக்கத் தோழர்கள் ஈடுபட்டனர். அதற்காக மாவட்டந்தோறும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை நம் இயக்க உறுப்பினர்கள் மனமுவந்து வழங்கியுள்ளனர்.*
*⚔*
*🛡ஒரு அசாதாரணச் சூழலில் சமூக அக்கறையுள்ள ஒரு இயக்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் இயக்க உறுப்பினர்கள் செயலாற்றி வருகின்றனர்.*
*⚔*
*🛡இன்னும் பல மாவட்டங்கள் தொடர்ந்து வரும் நாட்களில் தங்களது சேவைப்பணிகளைத் தொடர்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன. நம் இயக்கத் தோழர்கள் செய்துவரும் உதவிப் பணிகளை விளம்பரம் செய்வதற்காகவோ, பெருமை கொள்வதற்காகவோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் நாம் அதை வெளியிடுவது இல்லை.தோழர்கள் செய்துவரும் உதவிப் பணிகளை அங்கீகரிக்கவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், மற்றவர்களையும் இதுபோன்ற உதவிப் பணிகளில் ஈடுபடத் தூண்டுவதற்காகவுமே நாம் தொடர்ந்து அப்பணிகளை வெளியிட்டு வருகிறோம்.அதிலும் ஒருசில மாவட்ட ,வட்டார, நகரக் கிளைகளில் செய்யும் உதவி பணிகளே நமக்கு எட்டுகின்றன. இன்னும் சில கிளைகள் அரவமே இல்லாமல் உதவி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நம் தோழர்கள் பலர் தனிநபர்களாகவும் தங்களால் இயன்ற உதவிகளைப் பல இடங்களில் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். ஈடு இணையற்ற நம் இயக்கப் பொறுப்பாளர்களையும், ஈரமிக்க இயக்க உறுப்பினர்களையும் மாநில மையம் பாராட்டி மகிழ்கிறது.*
*⚔*
*🛡மேற்கண்ட நிகழ்வுகள், "TNPTF உறுப்பினர்கள் போராட்டக்களத்தில் மட்டுமல்ல;சேவை புரிவதிலும் சமரசமற்ற போராளிகள்" என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.*
*⚔*
*🛡இன்று (23.04.2020) மாநிலம் முழுவதும் உதவிப் பணிகளில் ஈடுபட்ட நம் பேரியக்கக் கிளைகள் (நமக்குக் கிடைத்த தகவலின்படி) பின்வருமாறு*
*⚡(1)காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டாரக்கிளை*
*⚡(2) திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டாரக் கிளை*
*⚡(3) ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டாரக் கிளை*
*⚡(4 )குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் வட்டாரக்கிளை*
*⚡(5)திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் வட்டாரக்கிளை*
*⚡(6) திண்டுக்கல் மாவட்டம்,ஆத்தூர், வேடசந்தூர், தொப்பம்பட்டி,பழனி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வட்டாரக் கிளைகள்*
*⚡(7)தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரக் கிளை*
*⚡(8)தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரக்கிளை*
*⚡(9) தோழர்.உ.நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்டம்*
*⚡(10)திருமதி.கீதா, துணைத்தலைவர், புதுக்கோட்டை மாவட்டம்*
*⚡(11) தோழர்.கணேசன், இரணியல் கன்னியாகுமரி மாவட்டம்*
*⚡(12)தோழர்.கனகராஜா, திருப்பூர் மாவட்டச் செயலாளர்*
*⚔*
*🛡மேற்கண்ட மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளையும் தனிநபர்களாக உதவி வழங்கிய தொண்டுள்ளம் கொண்ட தோழர்களையும் மாநில மையம் பாராட்டுகிறது! வாழ்த்துகிறது!*
*⚔*
*🛡வழிபாடு செய்யுங்கள்.... கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்! ஆனால்,சேவை செய்யுங்கள்....கடவுள் உங்களுக்கு அருகில் வருவார்.*
*- _அன்னை தெரசா_*
*சென்னை
23.04.2020*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்*_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment