Thursday 13 August 2020

*கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் நைஜீரியா நாட்டில் மரணம் / உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர / மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.*

*😢கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் நைஜீரியா நாட்டில் மரணம் / உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர / மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.*

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 13/2020  நாள்: 13.08.2020*

*_கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் நைஜீரியா நாட்டில் மரணம் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்_*

*😢நைஜீரியா நாட்டில் இறந்து போன கப்பல் ஊழியரான தலைமை ஆசிரியரின் மகன் உடலை அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.*

_இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._

*😢தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியம், புன்னக்காயல் என்ற ஊரில் வசிக்கும் வில்ஜியூஸ் லோபோ அருகில் உள்ள சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வி.வில்பன் லோபோ (வயது-21) கடந்த 15.11.2019ல் மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ஹல்விட்டா என்ற வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் இயந்திரப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து கடந்த எட்டு மாத காலமாகப் பணியாற்றி வந்துள்ளார்.*

*😢இந்நிலையில் கடந்த 26.7.2020 அன்று இரவு 10.30 மணிக்கு வி.வில்பன் லோபோ நைஜீரியா நாட்டில் கேமரூன் துறைமுகத்தில் கப்பலில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து விட்டதாக மும்பையில் உள்ள அலுவலகம் மூலம் தந்தை வில்ஜியூஸ் லோபோவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.*

*😢இது தொடர்பாகப் புன்னக்காயலில் உள்ள கப்பல் மாலுமிகள் சங்கத்தினர் மும்பையில் உள்ள அகில இந்தியக் கப்பல் மாலுமிகள் சங்கத்தைத் தொடர்பு கொண்டு, கடலில் தவறி விழுந்ததாகக் கூறப்படும் வி.வில்பன் லோபோவைத் தேடும் பணியைத் துரிதப்படுத்தினர்.*

*😢இந்நிலையில் கடந்த 28.07.2020 அன்று இறந்து போன வி.வில்பன் லோபோவின் உடல் கடலில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.*

*😢தற்போது இறந்தவரின் உடல் நைஜீரியா நாட்டில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.*

*😢தனது மகனின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இறந்துபோன வி.வில்பன் லோபோவின் தந்தையும், பள்ளித் தலைமை ஆசிரியருமான று.வில்ஜியூஸ் லோபோ தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அளித்துள்ளார்.*

*😢அதேபோன்று புன்னக்காயல் கிராம மக்களும், மீனவர் அமைப்புக்களும் இறந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.*

*😢இறந்து 17 நாட்கள் ஆகியும் தலைமை ஆசிரியரின் மகன் உடல் சொந்த ஊருக்கு இதுவரை கொண்டு வரப்படாததால் பெற்றோரும், உறவினர்களும், கிராம மக்களும் தொடர்ந்து பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.*

*😢எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகத் துரித நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அரசின் மூலமாக இறந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வந்து உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.*
                                                                                     
சென்னை    
13.08.2020

_இப்படிக்கு,_

*_ச. மயில்_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments: