*🖥️தேசிய கல்விக் கொள்கை-2020 கருத்தரங்கம்- இன்று (07.08.2020) மாலை 5.30 மணியளவில் ஆன்லைன் வழியே நடைபெற உள்ளது.*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*
*🖥️இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI), அகில இந்தியப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFUCTO) மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFUFA) ஆகிய மிக முக்கியமான ஆசிரியர் கூட்டமைப்புக்கள் இணைந்து இன்று (07.08.2020) மாலை 5.30 மணிக்கு இணையதளம் வழியாக தேசிய கல்விக் கொள்கை-2020 தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. நமது அகில இந்திய அமைப்பான இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்க நிகழ்வில் இணைந்திட வேண்டும்.*
*🖥️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் இணைந்து பயன்பெறுமாறு மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ click செய்தால் மட்டும் போதும் நேரடியாக youtube வழியாகக் கருத்தரங்கில் இணைந்து விடலாம். இது மிகவும் எளிது. சிரமம் எதுவும் இல்லை.*
*🖥️தேசிய முக்கியத்துவம் வாய்ந்த,நாட்டின் எதிர்காலம் சார்ந்த தேசிய கல்விக் கொள்கை-2020 தொடர்பான இக்கருத்தரங்கில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் இந்து என்.ராம், மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு.L. ஜவஹர் நேசன், புகழ்பெற்ற கல்வியாளர் பேராசிரியர் டாக்டர் ஆர். இராமானுஜம் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகின்றனர். எனவே, நம் இயக்கத்தின் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் இந்தச் செய்தியை உடனடியாகச் சமூக வலைதளங்கள் வழியே நம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் STFI இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவருக்குக்கும் கொண்டு சென்று, அனைவரையும் கருத்தரங்கில் இணையச் செய்து பயனடையச் செய்யுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*_🖥️கருத்தரங்கில் இணைவதற்கான லிங்க்:_*
👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/2BNg4G2OHpY
_🤝தோழமையுடன்;_
*_ச. மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment