Friday 11 September 2020

*அக்.5 : NEP-2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் சர்வதேச ஆசிரியர் தினத்தன்று ஆர்ப்பாட்டம் - AIFUCTO, STFI, SFI, TNSF, AISEC & AISA-ன் அகில இந்தியக் கூட்டமைப்பான JFME அறிவிப்பு*

*அக்.5 : NEP-2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் சர்வதேச ஆசிரியர் தினத்தன்று ஆர்ப்பாட்டம் - AIFUCTO, STFI, SFI, TNSF, AISEC & AISA-ன் அகில இந்தியக் கூட்டமைப்பான JFME அறிவிப்பு*

⚔️
🛡 கல்விக்கான இயக்கங்களின் அகில இந்தியக் கூட்டமைப்பான JFME (JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION) அமைப்பின் தமிழ்நாடு மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் AIFUCTO அமைப்பின் தேசியச் செயலாளர் தோழர் எஸ்.சுப்பாராஜூ தலைமையில் 08.09.2020 அன்று மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை காணொளி வழியே நடைபெற்றது.

⚔️
🛡 இக்கூட்டத்தில் *AIFUCTO* இணைப்புச் சங்கங்கள், *STFI* இணைப்புச் சங்கங்கள், *SFI, TNSF, AISEC, AISA* ஆகிய அமைப்புகளின் சார்பில் அவற்றின் மாநில அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

⚔️
🛡 கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கை 2020 தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் *தேசிய கல்வி கொள்கை 2020 தேசத்தின் எதிர்காலக் கல்வி வளர்ச்சியை, ஏழை எளிய மாணவர்களின் கல்வியை எவ்வாறெல்லாம் பாதிக்கும்* என்பதையும், *கல்வி முற்றிலும் வணிகமயமாகும்* சூழல், தனியார் பள்ளிகள் ஊக்குவிப்பு, *அரசுப்பள்ளிகள் அழியும் ஆபத்து, மொழித் திணிப்பு* உள்ளிட்ட பல்வேறு கூறுகளை விரிவாக விவாதித்தனர்.

⚔️
🛡 கூட்ட முடிவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி JFME சார்பில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

⚔️
🛡 தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நாம் ஏன் எதிர்க்கிறோம்? நாம் அதை நிராகரிப்பதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது தொடர்பாக *JFME சார்பில் விரிவான அறிக்கை* தயார் செய்து *மத்திய மாநில அரசுகளுக்கு* அனுப்புவது, *சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு* அளிப்பது.

⚔️
🛡 தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகக் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட *தகுதி வாய்ந்த குழுவின் மூலமாகச் சிறந்ததோர் கல்விக் கொள்கையை உருவாக்கி* நடைமுறைக்கு கொண்டு வரும் வாக்குறுதியை எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் *தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறச் செய்யும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நமது கோரிக்கை மனுக்களை அளிப்பது.* மேற்கண்டவாறு அறிக்கைகள் தயாரித்து அளிக்க *தோழர். கிருஷ்ணராஜ்* (AUT), *தோழர். மணி* (TNSF), *தோழர்.திலகர்* (AISEC), *தோழர்.சங்கர்* (TIAS) ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

⚔️
🛡 *தேசிய கல்விக்கொள்கை 2020-ன் பாதக அம்சங்கள்* தொடர்பாக *பொதுமக்களுக்கு எளிதாக விளக்கும் வகையில்* 40 முதல் 50 முக்கிய கருத்துக்களைக் கொண்ட *துண்டுப்பிரசுரம்* ஒன்றை வெளியிட்டு மாநிலம் முழுவதும் அதை வினியோகிப்பது.
மேற்கண்டவாறு துண்டுப் பிரசுரம் தயாரிக்க *தோழர் K.P.O.சுரேஷ்* (TNPGTA), *தோழர்.ரவி* (TNGCTA), *தோழர்.மாரியப்பன்* (SFI) ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

⚔️
🛡 தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக *27.09.2020* அன்று *இணையவழிக் கருத்தரங்கு* ஒன்றை நடத்துவது. அக்கருத்தரங்கில் 10 முதல் 15 கருத்தாளர்களை உரையாற்ற வைப்பது.
இக்கருத்தரங்கை ஒருங்கிணைப்பதற்கு *தோழர்.காந்திராஜ்* (AUT), *தோழர்.பேட்ரிக் ரெய்மாண்ட்* (TNGTF), *தோழர்.சுந்தர்* (TNSF) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

⚔️
🛡 தேசிய கல்விக்கொள்கை 2020-ன் பாதக அம்சங்கள் குறித்து *சமூக வலைதளங்களில் பிரசாரம்* செய்யும் வகையில் JFME சார்பில் போஸ்டர்களை வடிவமைத்து அதை *#RejectNEP2020* என்ற ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து பிரபலமாக்குவது.

⚔️
🛡 *தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி* JFME சார்பில் தமிழ்நாடு முழுவதும் *மாவட்டத் தலைநகரங்களில் சர்வதேச ஆசிரியர் தினமான 05.10.2020* அன்று *ஆர்ப்பாட்டம்* நடத்துவது. இந்நிகழ்வை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியே பிரச்சாரம் செய்வது.

⚔️
🛡 தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கத் *தமிழக அரசு அமைத்துள்ள* உயர் கல்வி, பள்ளிக்கல்வி தொடர்பான இரண்டு *குழுக்களுக்கும் JFME சார்பில் விரிவான கருத்துக்களை அளிப்பது.*

⚔️
🛡 JFME அகில இந்திய அமைப்பின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அமைப்பைப் பலப்படுத்துவது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டே, பிற அமைப்புகளையும் JFME-ல் இணைத்துக்கொண்டு விரிவடைந்த கூட்டமைப்பாக உருவாக்குவது.

⚔️
🛡 தமிழ்நாட்டில் *JFME அமைப்பின் பணிகளை ஒருங்கிணைத்திட மாநில அமைப்பாளராக STFI அமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளருமான தோழர் ச.மயில்* செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

_தோழமையுடன்_
*ச.மயில்*
_மாநில அமைப்பாளர்_
*JFME - தமிழ்நாடு*

No comments: