*_07.10.2020_ JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION (JFME) _கல்விக்கான கூட்டியக்கம்_ தமிழ்நாடு - TNPTF பொதுச்செயலாளர் அறிவிக்கை*
*⚔️*
*🛡️11.09. 2020 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில JFME ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக நமது ஆட்சேபணைகள், கருத்துக்கள், ஆலோசனைகள் உள்ளடக்கிய விரிவான கோரிக்கை மனு, தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கை 2020 ல் பள்ளிக் கல்வி தொடர்பாக அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் உறுப்பினர் செயலராகிய பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் மதிப்புமிகு.சிஜி தாமஸ் வைத்யன்,IAS அவர்களிடம் JFME சார்பில் சென்னையில் இன்று(07.10.2020) நேரில் வழங்கப்பட்டது.*
*⚔️*
*🛡️அதேபோன்று தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ல் உயர் கல்வி தொடர்பாக அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் தலைவராகிய உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.அபூர்வா,IAS அவர்களுக்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் JFME சார்பில் மேற்கண்ட கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.*
*⚔️*
*🛡️இந்நிகழ்வில் JFME தமிழ்நாடு மாநில அமைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளருமாகிய தோழர் ச.மயில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) தலைவர்கள் பேராசிரியர் காந்திராஜ், பேராசிரியர் ஆனந்த்,AISEC அமைப்பின் சார்பில் தோழர்.செபஸ்டியன், தோழர்.சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.*
_தோழமையுடன்;_
*_ச.மயில்_*
*மாநில அமைப்பாளர்-JFME*
*தமிழ்நாடு*
No comments:
Post a Comment