Thursday, 8 October 2020

*🛡️தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு - பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்*

*🛡️தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு - பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்*

*தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு - NATIONAL FORUM FOR WOMEN TEACHERS (NFWT) தமிழ்நாடு*

*🛡️பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்*

**07.10.2020**

*_NFWT இணைப்புச் சங்கங்களின் அருமைத் தோழியரே!_ வணக்கம்.*

*🛡️12.09.2020 அன்று நடைபெற்ற தேசிய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு (NFWT) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் 11.10.2020 ஞாயிறு அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.*

*🛡️இக்கருத்தரங்கில் தமிழகத்தின் சிறந்த ஆளுமைகள் கலந்து கொண்டு கருத்தரங்க உரை வழங்குகின்றனர்.*

*🛡️இக்கருத்தரங்கில் தேசிய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்துள்ள இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இணைப்புச் சங்கங்களின் ஆசிரிய சகோதரிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் இந்த வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது. அந்த வகையில் சமூகத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கின்ற சமூக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களாகிய நாம் நம்முடைய கடமையும் பொறுப்பும் உணர்ந்து செயலாற்றும் பொருட்டு பல்வேறு கருத்துக்களை எடுந்தியம்ப இருக்கிறார்கள். இந்த பொது முடக்க கால கட்டத்தில் வீட்டில் இருந்த படியே சிறந்த ஆளுமைகளின், சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை கேட்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே தோழியர் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு மாநிலக்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

_இந்தக் கருத்தரங்க நிகழ்வில் இணைந்திட மிக எளிதான வழி கீழ்க்கண்டவாறு:_

*🛡️இதுவரை Zoom app ஐ download செய்யாதவர்கள் play store மூலம் அதை முன்கூட்டியே download செய்து கொள்ளவும்.*

*🛡️ஏற்கனவே Zoom app ஐ download செய்துள்ளவர்கள் அதை update மட்டும் செய்து கொள்ளவும்.*

*🛡️மேற்கண்டவற்றை முன்கூட்டியே செய்துவிட்டு கருத்தரங்கம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ touch செய்யவும். அவ்வாறு செய்தவுடன் உங்கள் பெயர் கேட்கும். அதில் உங்கள் பெயருடன் சங்கத்தின் பெயர் மற்றும் மாவட்டத்தின் பெயரையும் சேர்த்து type செய்து ok கொடுக்கவும். இப்போது நீங்கள் நேரடியாகக் கருத்தரங்கில் இணைந்து விடலாம். அவ்வாறு இணையும் போது உங்கள் கைப்பேசி திரையின் கீழ்ப் பகுதியில் call over internet என்று வரும். அதை touch செய்தால் ஆடியோ கேட்கத் தொடங்கிவிடும்.*

*🛡️மேற்கண்டவாறு எளிதான வழியில் கருத்தரங்கில் இணைந்திட அருமைத் தோழியர் அனைவரையும் மாநிலக்குழு அன்புடன் அழைக்கிறது.*

*🛡️கீழே கொடுக்கப்பட்டுள்ள ID, Password வழியாகவும் Zoom appல் இணையலாம். Facebook நேரலை வழியாகவும் கருத்தரங்கில் இணையலாம். ஆனால் கருத்தரங்கில் இணைவதற்கு மிக எளிதான வழி கீழ்க்கண்ட link மூலம் இணைவது தான் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*

https://us02web.zoom.us/j/5889881957?pwd=dGo1VENuYk9JbVArNHN6UFBBMXJndz09

*🌟குறிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 50 பெண்ணாசிரியர்களை கருத்தரங்கில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். எனவே, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களும், தேசிய பெண்ணாசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில நிர்வாகிகளும் இமைப்பொழுதும் சோராது பணியாற்றி கருத்தரங்கை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*

_🤝தோழமையுடன்;_

*_மூ.மணிமேகலை,_*
_மாநில ஒருங்கிணைப்பாளர்,_
*தேசிய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு*

No comments: