*🛡️தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் (NFWT) தமிழ்நாடு கிளையின் சார்பில் நாளை (11.10.2020) பிற்பகல் 2.30 மணிக்கு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:10.10.2020*
*_பேரன்புமிக்க நம்பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*
*🖥️*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் (NFWT) தமிழ்நாடு கிளையின் சார்பில் நாளை (11.10.2020) பிற்பகல் 2.30 மணிக்கு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*
*🖥️*
*🛡️இக்கருத்தரங்கிற்கு நமது பேரியக்கத்தின் மாநிலத் தலைவரும், தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் மூ. மணிமேகலை அவர்கள் தலைமை ஏற்கிறார்.*
*🖥️*
*🛡️இக்கருத்தரங்கில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.சுகந்தி,சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் தோழர்.கல்பனா கருணாகரன் ஆகிய மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் கருத்தரங்க உரையாற்றுகின்றனர்.*
*🖥️*
*🛡️மேலும்,தமிழ்நாட்டில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நம் தோழமைச் சங்கங்களின் தலைவர்களாகிய சகோதரிகள் மிகச்சிறப்பான கருத்துரைகளை வழங்க உள்ளனர்.*
*🖥️*
*🛡️இன்றைய கொரோனா பொதுமுடக்கச் சூழலில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் நிலையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆசிரியப் பெருமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். நம் இயக்கத்தின் ஆண் ஆசிரியப் பெருமக்களுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். மேலும், சங்க வேறுபாடின்றி பெண்ணாசிரியர்களை இதில் பங்கேற்க செய்திட நம் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் விரைந்து செயலாற்றிட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*🖥️*
*🛡️நம் இயக்கத்தின் சார்பில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். கருத்தரங்கில் இணையும் நம் இயக்க உறுப்பினர்கள் தங்கள் பெயருடன் TNPTF என்று டைப் செய்ய வேண்டும். மேலும், கருத்தரங்கில் இணைபவர்கள் கீழ்க்கண்ட Link ஐ Click செய்து Zoom app மூலம் கூட்டத்தில் எளிதாக இணைத்துவிடலாம்.*
https://us02web.zoom.us/j/5889881957?pwd=dGo1VENuYk9JbVArNHN6UFBBMXJndz09
*🖥️*
*🛡️மேற்கண்டவாறு Link மூலம் இணைய இயலாதவர்கள் TNPTF TAMILNADU state centre என்ற முகநூல் கணக்கில் நேரடியாக எளிதாக இணைத்துவிடலாம்.*
*🖥️*
*🛡️இச்செய்தியை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து TNPTF குழுக்களுக்கும் பகிர்வு செய்து கருத்தரங்கில் TNPTF உறுப்பினர்களின் பெருமளவிலான பங்கேற்பை உறுதி செய்திடவும், அனைத்து மாநில/ மாவட்ட/வட்டார/ நகரப் பொறுப்பாளர்கள் எக்காரணம் கொண்டும் தவறாது இந்நிகழ்வில் பங்கேற்றிடவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*
_தோழமையுடன்;_
*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment