Thursday, 28 January 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- 28.01.2021 மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை-கூட்ட முடிவுகள்- செய்தியறிக்கை*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- 28.01.2021 மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை-கூட்ட முடிவுகள்- செய்தியறிக்கை*

*🛡️மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 01/2021  நாள்: 28.01.2021*

*🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!*

*⚔️*                                          
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 28.01.2021 அன்று மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*⚔️*
*🛡️கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.*

*⚔️*
*🛡️மதுரை மாவட்டச் செயலாளர் க.ஒச்சுக்காளை வரவேற்புரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.*
                                      
*⚔️*
*🛡️கூட்டத்தில் இயக்கத்தின் கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கல்விச்சூழல், இயக்கத்தின் 13-வது அமைப்புத் தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரை ஆற்றினார்.*

                                             *⚡கூட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,*

*⚡இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்,*

*⚡2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகக் கைவிட வேண்டும்,*

*⚡தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும்,*

*⚡மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்,*

*⚡ஆசிரியர் நியமன வயது வரம்பைத் தமிழக அரசு 40 ஆகக் குறைத்து ஆணையிட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும்,*

*⚡"கற்போம் எழுதுவோம்" திட்டத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்,*

*⚡2020-21 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்,*

*⚡பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு ரத்து ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.*

*🛡️உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் 20.02.2021 அன்று சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் "தொடர் முழக்க போராட்டம்" நடத்திட முடிவு செய்யப்பட்டது.*                                           

*⚔️*                                           
*🛡️மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில துணை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*                                                                        

_🤝இப்படிக்கு;_                                                          

 *_ச.மயில்_*                                                _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*      

No comments: