*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - புதிய வட்டாரக் கிளை துவக்க விழா - மாநில மையம் வாழ்த்துச் செய்தி*
*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம், தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(30.01.2021)புனித தோமையார் மலை வட்டாரக் கிளை தொடக்க விழா மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.*
*🚩நம் பேரியக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் பெ.அலோசியஸ் துரைராஜ் உள்ளிட்ட மாவட்டக் கிளை நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.*
*🚩சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ள புனித தோமையார் மலை வட்டாரக் கிளை மாநிலத்தின் முன்னணிக் கிளைகளில் ஒன்றாய் உயர்ந்தோங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.*
*🚩புதிய கிளை தொடங்கிட அயராது உழைத்திட்ட தோழர்.சுரேஷ்குமார் அவர்களுக்கும், மாநில, மாவட்டக்கிளை நிர்வாகிகளுக்கும் மாநில மையம் பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.*
*🚩புதிய கிளையின் புதிய நிர்வாகிகள் இயக்கப் பணியில் இலக்கணமாய்த் திகழ்ந்திட மாநில மையம் வாழ்த்துகிறது.*
🤝வாழ்த்துக்களுடன்
*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment