*📲TNPTF,MUTA இணைந்து நடத்தும் கோவிட்-19 தொடர்பான இணையவழிக் கருத்தரங்கம்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில மையம்*
*22.05.2021*
_அன்பான நம் பேரியக்கத் தோழர்களே!_ *வணக்கம்.*
*📲கொரோனா கொடுந்தொற்றால் தமிழகத்தில் மட்டும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆசிரியப் பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.*
*📲இக்கட்டான இந்தச் சூழலில், நோய்த்தொற்று தொடர்பாக நம் இயக்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கையாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி(TNPTF), மதுரை காமராசர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்(MUTA) ஆகியவை இணைந்து 23.05.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30மணிக்கு கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு "இணையவழிக் கருத்தரங்கம்" ஒன்றை நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் மும்பையில் பணியாற்றும் தமிழக மருத்துவர் S.பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இன்றைய சூழலில் மிகவும் அவசியமான, தேவையான நிகழ்ச்சி இது.எனவே,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் தவறாது இணைந்து பயன் பெறுமாறு மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*_இந்நிகழ்வில் கீழ்க்கண்ட Zoom App Link மூலமாக இணையலாம்._*
https://us02web.zoom.us/j/9313533344?pwd=WmZQS1JrUFJodmFKcFR1ZE9KR3ZOZz09
Meeting ID:931 353 3344
Passcode:938566
*📲மேலும்,Voice of MUTA என்ற முகநூல் வழியிலும் இணையலாம்.*
*📲இந்நிகழ்வில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இணையலாம். நிகழ்ச்சியில் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். இச்செய்தியை நம் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்திட அன்புடன் வேண்டுகிறேன்.*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment