*🛡️ஈடு செய்ய முடியாத இழப்பும், NHIS திட்டத்தில் TNPTF தலையீடும்*
😢தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் *தோழர் ரமேஷ்* அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
🛡️தோழர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் *NHIS* திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் தொகை பெற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் *தோழர் மயில்* மற்றும் ஜாக்டோ ஜியோ நிநிக்காப்பாளர் *தோழர் மோசஸ்* ஆகியோரின் பரிந்துரைப்படி மாநில ஒருங்கிணைப்பாளர் *தோழர் செல்வகணேஷ்* அவர்கள் கடுமையாக முயற்சி செய்து வந்தார்.
🛡️இந்நிலையில் இன்று தோழர் ரமேஷ் அவர்கள் மரணமடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் *ரூபாய் 6 லட்சம்* சிகிச்சை செலவாக கோரியது. இன்சூரன்ஸ் நிறுவனம் சிகிச்சை செலவை அனுமதிக்க மறுத்த நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு தலையிட்டு *ரூபாய் 4 லட்சத்தை* பெற்றுக் கொடுத்துள்ளது.
தோழரின் மறைவால் அவதியுறும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் *தோழர் தியாகராஜன்* அவர்களுக்கும், இயக்க தோழர்களுக்கும் ஆறுதலையும் மறைவிற்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*
*😢துக்கத்துடன்*
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்
No comments:
Post a Comment