*JACTTO-JIO திருநெல்வேலி - செய்தி துளிகள்!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f-18.html
🌟 *நெல்லையில் 18.11.2017 அன்று ஜாக்டோ - ஜியோ ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.பால்ராஜ், வீ.பார்த்தசாரதி,சோ.பால்துரை, திரு.மூட்டா முருகேசன் ,C.T.ஆசீர் சார்லஸ் நீல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.*
🌟 *இக்கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பில் உள்ள மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 24.12.2017 ல் வட்டத்தலைநகரங்களில் நடைபெறும் மாலை நேர ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு சிறப்பாக எழுச்சியாக நடத்துவது என ஆலோசனை வழங்கினர்.*
🌟 இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
🌟 *1.ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.*
🌟 *2.திருநெல்வேலி அரசு தானியங்கி பணிமனையில் பணியாற்றி வந்த திரு.முருகன் மீது போடப்பட்ட பொய்வழக்கினை பாளையங்கோட்டை காவல் நிலையம் திரும்பப் பெறவேண்டும் எனக்கோரி 29.11.2017. புதன்கிழமை அன்று மாலை சுமார் 3,000 ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி மாவட்ட தலைநகரில் மாலைநேர ஆர்பாட்டம் நடத்துவது.*
🌟 *3.ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தையும் படிகளையும் வழங்க வேண்டும்*.
🌟 *4.CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்*.
🌟 *5.01.01.2016. முதல் 21 மாத ஊதியக்குழு நிலுவைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்*.
🌟 *6.சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டும்*.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
🌟 *மேற்காண் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அனைத்து வட்ட தலைநகரங்களிலும் 24.11.2017. அன்று மாலைநேர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.*
🌟 *ஜாக்டோ - ஜியோ சார்பில் 24.11.2017 அன்று வட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் இடங்கள்*.
🌟 தோழர்களே!
🌟 *கீழ்கண்ட 9 வட்டங்களில் ஆர்ப்பாடம் நடைபெறும்.*
*1.திருநெல்வேலி வட்டம்*
(திருநெல்வேலி, மானூர்)
*2.பாளையங்கோட்டை வட்டம்*.
(பாளைதாலுகா மட்டும்)
*3.ஆலங்குளம் வட்டம்*
(V.K.புதூர்,ஆலங்குளம்)
*4.தென்காசி வட்டம்*
(தென்காசி,கீழப்பாவூர்,கடைய நல்லூர்)
*5.செங்கோட்டை வட்டம்*
(செங்கோட்டை தாலுகா மட்டும்)
*6.சிவகிரி வட்டம்*
(புளியங்குடி,வாசு,சிவகிரி)
*7.சங்கரன் கோவில் வட்டம்*
(சங்கை,திருவேங்கடம், மேலநீலித நல்லூர்)
*8.அம்பாசமுத்திரம் வட்டம்*
(அம்பை,சேரன்மகாதேவி,கடையம்)
*9.நான்குனேரி வட்டம்*
(நான்குனேரி,வள்ளியூர்,ராதாபுரம்,களக்காடு)
🌟 *அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தாங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அந்தந்த வட்டங்களில் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்யும்படி கனிவோடு கேட்டுக் கொள்கிறோம்.*
தகவல் பகிர்வு....
*செ.பால்ராஜ்**மாவட்ட செயலாளர்**தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி**திருநெல்வேலி*.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தோழமையுடன்,
செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment