Thursday, 25 January 2018

*பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_25.html


🌟 06. 01. 17 பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் இரண்டாவது கூட்ட செயல்பாடுகளின் பதிவு


🌟 இடம் : சென்னை யுரேகா சென்டர் , AID India 


🌟 வசந்திதேவி அம்மா ,J.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ,லலிதா நடராஜன் வழக்கறிஞர் , பாரதி புத்தகாலயம் நடராஜன் ,எழுத்தாளர் முருகேசன் ,ஆசிரியர் காளீஸ்வரன்,அன்வர் - ஹிந்து காலம் பதிவு , யாதும் ஆவணப்படம் தயாரிப்பாளர் , ஆசிரியர் மீனா ராஜன் ,ஏழுமலை - நாகராஜன்ஆசிரியர்கள் விழுப்புரம்  PUMS செங்கமேடு,குழந்தை நேயப் பள்ளி ஷ்யாம் - மோனிகா ,முனைவர் வித்யாசாகர் - UNICEF ,தோத்தாத்ரி AID India , கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு தோழர் மூர்த்தி , சுடர் அமைப்பின் தோழர் நடராஜர் , அறிவியல் இயக்கம் Acs மணி ,A3 அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் .

******************************************************************************************


🌟 தலைவர் வசந்தி தேவி அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளோடு கூட்டத்தை ஆரம்பிக்க , சென்ற கூட்டத்திற்கான அறிக்கை பகிர்வு செயலர்  JK அவர்களால் விளக்கப்பட்டது. நமது தலையாய நோக்கம் கல்வி உரிமைக்கான சட்டத்தைப் பற்றி மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்வதே .( right- to education  act) 50% பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெற்றிருத்தலும் 75 % பெண்களாக இருத்தலும் அவசியம் என்பதும் குறிப்பிட்டு ,


🌟 சென்ற கூட்டமுடிவு : 1000 பள்ளி SMC செயல்பாடு பற்றிய ஆய்வு , பள்ளித் தேவைகள் பெரும்பாலும் பூர்த்தியடையவில்லை , திட்டங்கள் ( SSA, RMSA )   பள்ளிகளைச் சென்றடைந்ததா என ஆய்வு செய்தல் முதலிய கருப்பொருள்களோடு  முதல் கூட்ட முடிவு எடுக்கப்பட்டது. ஜனவரி 26 கிராம சபைகள் கூட்டத்தில் தமிழகமெங்கும் நடைபெறுவதில் துண்டறிக்கை , poster வழி செய்வதென்பதும் கலந்துரையாடலில் இடம் பெற்றன என முதல் கூட்டம் பற்றிப் பகிர்ந்தார் .

##################################################################


🌟 இன்றைய விவாதம் (6. 01-18)

****************************

🌟 வசந்தி தேவி தலைவர் : கல்விக்காக நிதி ஒதுக்கீடு GD இல்   60%   இருக்க வேண்டும் என 1960 களிலிருந்து  இருந்தாலும் 3.4 சதவீதமாகவே இருக்கின்றது . கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வருவது இயலாததாகிவிட , சட்டம் வழியே அரசை வற்புறுத்த வேண்டும் .கல்வி உரிமைச் சட்டம், பல போராட்டங்களுக்குப் பிறகு 2009 இல்  வந்தது , அதில் பல வகைப் பள்ளிகளும்  இருக்கலாம் , கல்வி  ஓரளவு வியாபாரமாக்கலாம் என வந்து விட்டது 


🌟 அதன் கடைசி 2 பக்கங்களில் உள்ள பிரிவில் , பள்ளிகட்டமைப்பு , பள்ளியை யார் நிர்வகிப்பது ,கழிவறை, பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு நம் ஆசிரியர்களிடமே இல்லை . ....SMC இல் உறுப்பினராக இருப்பவர்தான் சட்டப் பிரகாரம் அதிகாரம் பெற்றவராகவும் பள்ளிகளைக்  கேள்வி கேட்பவராகவும் இருக்க முடியும் . (75 %) பெண்கள் அதில் இடம் பெற வேண்டும் , பெற்றோர் தான் இருக்க வேண்டும் , கல்விச் சட்டத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை ..மக்கள் இயக்கங்களை உருவாக்குவதே நமது தலையாய நோக்கம், 1000 பள்ளிகள் ஆய்வு செய்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டவை இப்பள்ளியில் இது இல்லை என ஆதாரங்களோடு  நீதிமன்றங்களை அணுக வேண்டும். தனியார் பள்ளிகளைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என தனது கருத்துகளை முன்வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும்  Agenda பற்றி பகிரப்பட்டது .


🌟 AID India வின் அலுவலர் தோத்தாத்ரி அவர்களால்  , தங்கள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் கற்றல் திறனுக்காக , கிராமங்களில் செய்த  ஆய்வு பற்றிய ஆவணம் பகிரப்பட்டது.


🌟 வருமானம் ஆண்டுக்கு ₹ 12500க்கு குறைவாக இருக்கும் பெற்றோர் அரசுப் பள்ளிக்கும் ,₹ 37500 வருமானம் பெறும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கும் அனுப்புகின்றனர் , மக்களிடம் இது பற்றி எடுத்த ஆய்வின் அடிப்படையில்  , அவர்களின் இந்த எதிர்பார்ப்பிற்கு தங்கள் பிள்ளைகள் படிப்பில் ,ஆங்கில மோகம் , ஒழுக்க நெறிகள் ,கல்வியின் தரம் இவற்றையே அடிப்படைக் காரணங்களாக வரையறுக்கப்பட்டது.... என தோத்தாத்ரி தங்கள் ஆய்வு கருத்துருகளைப் பகிர்ந்தார் .


🌟 Unicef - Dr வித்யாசாகர்  - அரசுப் பள்ளிகளிலும்  பிரச்சனைகள் உண்டு , அதை சரி செய்ய வேண்டும் எனக் கூறி ஆசிரியர்களின் சக்ஸஸ் ஸ்டோரியை பரவலாக்க வேண்டும். அப்போது நேர்மறையான மாற்றங்கள் வரும் என்றார் , பெரும்பாலான உறுப்பினர்கள்  அதை ஆமோதித்தனர்.


🌟 குழந்தை நேயப் பள்ளிகள் அமைப்பின் தோழர்  ஷ்யாம் சுந்தர் ...600 பள்ளிகளுக்கான ஆய்வுகளைக் கீழ் வரும் ஆய்வுத் தலைப்புகளில் சமர்ப்பித்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆசிரியர்களை ஒருங்கிணைக்க இயலவில்லை எனவும் பதிவு செய்தார் .


🌟 சுத்தமான குடிநீர் , கழிப்பறை வசதி - சுத்தம்  செய்வது யார் , கழிப்பறைக்கு நீர் போதுமானதாக வசதி உள்ளதா ?, ஆசிரியர்களுக்கான கழிப்பறை வசதிகள் . மதிய உணவுத் திட்டத்தின் தரம் , விளையாட்டு மைதானம் உள்ளதா , நேரம் ஒதுக்கப்படுகிறதா , பாதுகாப்பான சுற்றுச்சுவர் உள்ளதா , வகுப்பறைகள் போதுமானதாக உள்ளதா , பள்ளி வளாகத்திற்குள் உள்ளூர் மக்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா , சுகாதாரமான சமையல் கூடம்  , நூலகத்திற்கு தனி அறை . செய்தித்தாள்கள்  , பருவ இதழ்கள் மற்றும் புத்தகங்கள் கொண்ட .நூலக வசதி , மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சாய்தள அமைப்பு உள்ளதா , பள்ளி வளாகத்தில் காய்கறித்  தோட்டம் , மரங்கள் உள்ளதா , குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகள் மனரீதியான துன்புறுத்தல்கள் உள்ளதா , குழந்தைகள் மீது  எவ்விதப் பாகுபாடும் காட்டப்படவில்லையா என பள்ளி உறுதி செய்தல் ,SMC இன் ஒத்துழைப்பு , ஆசிரியர் பள்ளி மேலாண்மைக் குழு உள்ளூர் கல்வித் துறைக்கும் இணக்கமான சூழல் எனத் தலைப்புகள் விரிந்தன.


🌟 இதன் முடிவாக , இன்றளவில் நேர்மறையான மாற்றங்களே பள்ளிகளில் நிகழ்ந்து ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்த அனுபவங்களை மற்ற ஆசிரியர்களிடம்  பகிர்ந்து பரப்பச் செய்வது சிறந்த பயனளிக்கும் எனக் கருதுவதாகக் கூறினார். ஆய்வின் முடிவில் SMC ஏன் பரவலாகத் தோல்வியைத் தழுவியது எனக் காஞ்சிபுர மாவட்டப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 200 பேரிடம் எழுத்துப் பூர்வமாக காரணங்களை சேகரித்து அவற்றையும் சமர்ப்பித்தார்.


🌟 தொடர்ந்து ,நம் பள்ளி  அரசுப் பள்ளி ( Our School our Pride) என்ற தலைப்பில் பெருமைக்குரிய - மாநிலம் தழுவிய  ஒரு சுற்றுப்பயணம் கலைக்குழுவோடு ஆசிரியர்கள் துணை கொண்டு செயல்படப் போவதாகவும்  அறிவித்தார் .


🌟 மேலும் இவரது அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் ஆங்காங்கே அரசு பள்ளிகளில் பல்வேறு விதமான தலைப்புகளில் நேரிடையாகச் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார் , கூடுவாஞ்சேரி அருகே ஒரு பள்ளி மாணவர்கள் மாணவிகளிடம் பாலின வன்முறை செயல்பாடுகளில் எல்லை மீறுவதாகவும் , அங்குள்ள ஆசிரியர்கள் இதை கண்டிக்கத் தவறிவிட்டதாகவும் கூட அறியப்பட்டதாகத் தகவல் அளித்தார். இப்பிரச்சனையை  சட்ட ரீதியாக எவ்வாறு அணுகலாம் என நமது குழுவின் சட்ட ஆலோசகர் லலிதா நடராஜன் தொடர்ந்து உதவுவதாகக் கூறினார் , அனைவருக்கும் சமத்துவக் கல்வி நவம்பர் மாத இதழ் வழங்கினார்கள்  மோகனாவும் ஷ்யாமும்.

🌟 மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ,


🌟 தலைவர் வசந்தி தேவி அவர்கள்  ... ஷ்யாமின் ஆய்வைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை முன்வைக்கக் கருத்துகளை வரவேற்றார்,


🌟 SMC ஐ மையமாக வைத்து ஆசிரியர் , மாணவர் , பள்ளி வளங்களை எவ்வாறு நிறைவு செய்வது .. கல்வி வரி (education cess) வழியாக இதற்கான தகவல்களைப் பெறலாம் என வலிதா நடராஜன் வலியுறுத்தினார்  ...


🌟 தொடர்ந்து , பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் பணி சார்ந்த குழுக்கள் பிரிக்கப்பட்டு செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டன .


🌟 அடுத்து ,சின்னக் கண்ணன் மாணவன் தேசிய அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது பெற்றது பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு சுடர் நடராஜன் செய்தார் , இதற்கு முன் 2012 இல் கணேசன் மாணவன்  பனாராஸ் தேசிய மாநாட்டில் எவ்வாறு பங்கு பெற்றான் என்பதைப் பதிவு செய்தார் , 2013 இல் கவின் மாணவன்  பெண் குழந்தைகள் திருமணம் 80% என்பதை ஆய்வாக்கி தேசிய அறிவியல் விஞ்ஞானியானான் என முன்னுரைத்து , இந்த முறை தேசிய விஞ்ஞானியான சின்னக் கண்ணன் பற்றிக் கூற , மாணவனே  பேசுகிறார் .


🌟 மலை கிராமங்களில் சக்தி எவ்வாறு விரயமாகிறது என்ற அவரது ஆய்வு பற்றியப் பகிர்வு புதுப் பரிமாணத்தை நமக்குத்  தந்துள்ளது, காலம் பொன் போன்றது என்பதை மாற்றி காலம் - ஆற்றல் என்பதை உணர்த்தியுள்ளது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதிப்பீட்டாளராக இருந்த பேரா .மணி குறிப்பிட்டதாகக் கூறினார் சுடர் நடராசன் .இந்த ஆய்வால் மாணவர்கள் சமூகத்தை எவ்வாறு தங்கள் வாழ்வின் அங்கமாக உணர்ந்து செயல்படவும் , சமூகப் பொறுப்பையும் பெற்று விட்டதாகக் கூறியது சிறப்பு. அதோடு தனது பள்ளியில் SMC எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதையும் பகிர்ந்து கொண்டார் , கிராமசபைக் கூட்டங்களில் எவ்வாறு நாம் இயங்க வேண்டும் , உடனடியாக அதை ஊடகங்களில் அச்சில் கொணர வேண்டும் எனவும் பகிர்ந்தார். 


🌟 கிராமசபைக் கூட்டம் 


🌟 ஜனவரி 26 நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில்  அமைப்பு சார்ந்து செயல்பட வேண்டிய நடைமுறை பற்றியும், பொதுவாக தமிழகத்திற்குரிய பொதுத் தீர்மானங்களாக ,

1. மழலையர்  வகுப்பறை

2. ஆசிரியர்  பற்றாக்குறை 

3. கட்டமைப்பு இவற்றையும் தனித்தனியாக வெவ்வேறு பள்ளிகளில் தேவைக்கேற்ப தீர்மானங்களை உடன் சேர்த்துக் கொள்ளவும் வழி காட்டப்பட்டது.


🌟 கிராமசபைக் கூட்டத்தை மையப்படுத்தி, இக்கூட்டத்திற்கு வந்திருக்கும் அமைப்புகள் ஆங்காங்கே தங்களால் இயன்ற அளவு கிராமசபைக் கூட்டங்களில் கிராமப் பஞ்சாயத்து சார்பாக பள்ளிகளுக்கான தீர்மானங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் வழியாக    ஒட்டு மொத்தமாக , தமிழகம் முழுக்க செயல்படுத்தப்பட வேண்டும்  எனவும் , இந்த செயல்பாடுகள்  செய்தித்தாள்கள் , பத்திரிக்கைகளில்  உடனடியாக அறிக்கையாகத் தர வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது .


🌟 வருங்கால செயல் திட்டம்  பற்றி விளக்கமான முறையில் கலந்துரையாடல் நடைபெற்றது .


🌟 அஜெண்டாவில் உள்ள படி வருங்கால செயல்பாடுகள் ஒவ்வொரு குழுவிற்கும் பகிர்ந்து தரப்பட்டது. சென்ற கூட்டத்திற்கும் இக்கூட்டத்திற்கும் வருகை தந்த அமைப்புகளைக் கணக்கில் கொண்டு , கல்வி தளத்தில் தமிழகம் முழுக்கப் பரவலாகத் தொடர்பில் இருக்கும் அமைப்புகளான தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  (TNSF), அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3) குழு , கல்வி மேம்பாட்டுக் குழு  , குழந்தை நேயப் பள்ளிகள் குழு மற்றும் சுடர் அமைப்பு இந்த 5 குழுக்களில் இருந்து கணிசமான எண்ணிக்கை உடைய 5 (அ) 6 நபர் கொண்ட மாவட்டக் குழுக்கள் உருவாக்கு நமது அடுத்து வரும் செயல்பாடுகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.


🌟 மேலும் , குழுவின் வளர்ச்சிக்குத் தேவையான  நிதி திரட்ட வேண்டிய சூழலும் இருப்பதால் அடுத்த மாதக் கூட்டத்திற்கு வரும் பொழுது உறுப்பினர் ஒவ்வொருவரும் ₹ 1000 குறைந்த பட்சம் செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


🌟 இது போல பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் நடத்திய  செயற் கூட்டங்களை பத்திரிக்கை செய்திகளாக வரும் வாரத்தில் தருவதாகவும் , ஜனவரி 26 கிராமசபைக் கூட்டத்தின் வழியாக நமது பள்ளி மேலாண்மைக் கூட்ட விழிப்புணர்வைப்  பற்றி செய்தியாகத் தருவது எனவும் முடிவு செய்யப்பட்டு , விழிப்புணர்வை விரிவுபடுத்த , மக்களிடம் பரவலாக்க  ஏராளமான இளைஞர்கள் , மற்ற அமைப்புகள் இவர்களையும் இணைக்கவும் , முகநூல் வழியாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் எதிர்கால செயல்பாடுகளை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.


🌟 நமது அடுத்த கூட்டம் பிப்ரவரி 10 ஆம் தேதி நடத்த ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது.

அன்பும் நன்றியும்

உமாமகேஸ்வரி


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: