🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_22.html
*🌟தொடக்கக்கல்வி துறையின் கீழுள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குதல் சார்ந்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*
🌟திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஒன்றியம் ஏர்வாடி, உதவி பெறும் எஸ்.வி.இந்து துவக்கப்பள்ளியில் 16.03.2018 அன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு அதிக ஒளி கொண்ட சோடியம் விளக்கு பயன்படுத்தப்பட்டதால், விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாக 17.03.2018 அன்று தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியிடப்பட்டது.
🌟 எனவே இது தொடர்பாக தொடக்கக்கல்வி துறையின் கீழுள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் இனிவரும் காலங்களில் ஆண்டு விழா நடத்தப்படும் போது கீழ்க்கண்ட மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரைகளைத் தவறாது பின்பற்றிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
⚡ஆண்டு விழா மாலை 6.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்,
⚡விழாவின்போது அதிக ஒலி கொண்ட ஒலிப்பெருக்கி மற்றும் அதிக ஒளி கொண்ட மின்விளக்கு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது.
⚡விழா நடைபெறும் இடமானது மாணவர்களுக்கு பாதுகாப்பானதாகவும், எளிதில் மாணவர்கள் வெளியே சென்றுவர ஏதுவாகவும் இருத்தல் வேண்டும்,
⚡விழா நடைபெறும் முன்னர் விழா மேடை, மாணவர்கள் இருக்கை, விழாவிற்காக பயன்படுத்தப்படும் ஒலி/ ஒளி சாதனங்கள் ஆகியன அமைத்தல் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment