Thursday, 12 April 2018

*(பி.எட்) இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு பயில்வது கற்றல் கற்பித்தல் பயிற்சிக்கு செல்வது குறித்து திருத்தம் செய்யப்பட்ட அரசாணை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_88.html


*🌟தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி/ நகராட்சி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) பயில்வது கற்றல் கற்பித்தல் பயிற்சி பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ள ஆணையிடப்பட்டது திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.*


*திருத்தம் செய்து அறிவிக்கப்பட்ட ஆணை*


*🌟தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி மற்றும் உதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) பயிலும் போது கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே பிற பள்ளிகளுக்கு செல்லாமல், அந்தந்த பல்கலைக்கழகங்களால் அனுமதிக்கப்படும் போது, விடுப்பு எடுக்காமல் மேற்கொள்ளவும், தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அருகில் உள்ள நடுநிலை/ மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளிகளில் அப்பயிற்சியை மேற்கொள்ளவும், அப்பயிற்சி காலத்தினை அடிப்படை விதிகள் விதி 9(6)(b) (i) ன் படி பணிக்காலமாக கருதவும் அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்பட்டுள்ளது.*     



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: