Thursday, 24 May 2018

*பள்ளிகளை மூடும் முடிவை கைவிடாவிட்டால் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_24.html


*🌟தமிழக அரசு எடுத்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் மூடும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி கடும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர். மயில் கூறினார்.*


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் (22.05.2018) செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் தோழர். மணிமேகலை தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர்.ஆரோக்கிராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் தோழர். மயில் தீர்மானங்களையும், செயல் திட்டங்களையும் விளக்கி பேசினார். மாநில பொருளாளர் தோழர். ஜோதிபாபு, மாநில துணைப் பொதுச்செயலாளர் கணேசன், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர். மோசஸ் ஆகியோர் எழுச்சி உரையாற்றினார்கள்.*


*🌟கூட்டத்தில்,*

*⚡1350 க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்.*


*⚡24 ஆண்டுகளாக தனித்து செயல்பட்டு வந்த தொடக்கக்கல்வித் துறையை மூடும் முடிவை கைவிட வேண்டும்.*


*⚡கலந்தாய்வு மாறுதலை உடனடியாக நடத்த வேண்டும்.*



*💪இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 6 ம் தேதி மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,* 


*💪ஜாக்டோ ஜியோ சார்பில் 11 ம் தேதி முதல் சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது.*



*💪பல லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் சூழ்நிலையில் பணியிடங்களை குறைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 56 ஐ திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*


*🌟கூட்டத்திற்குப் பின்னர் மாநில பொதுச்செயலாளர் தோழர்.மயில் நிருபர்களிடம் கூறியதாவது:*


*💪தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள சுமார் 1300 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கிறோம். கிராமப் புறங்களில் உள்ள குழந்தைகள் பல கிலோமீட்டர் நடந்து சென்று படிக்க வேண்டும். இதனால் படிப்பை பாதியில் நிறுத்தும் இடைநிற்றல் சூழ்நிலை உருவாகும்.*


*🌟எனவே இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் இல்லாவிட்டால் பள்ளிகள் மூடப்படும் கிராமங்களில் மக்களைத் திரட்டி கடும் போராட்டங்கள் நடத்தப்படும்.*


*🌟5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோவின் அடுத்தகட்ட போராட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஜுன் 11 ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதைவிட கடும் போராட்டங்களை ஜாக்டோ ஜியோ திட்டமிட்டு நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.*


*⚡தோழமையுடன்;*

*_தோழர்.ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: