Sunday, 6 May 2018

*நீட் குறித்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரங்கல் & கண்டன அறிக்கை!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_36.html


*🌟6.5.18, இன்று நடைபெற்ற நீட் தேர்விற்காக திருவாரூர் மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு தேர்வு எழுத மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் பணிக்கப்பட்ட மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் அவர்களின் தந்தை திரு.கிருஷ்ணசாமி அவர்கள் பயண அலைக்கழிப்பால் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த செய்தி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.* 

*🌟திரு.கிருஷ்ணசாமி அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.*



*🌟பொதுப்பட்டியலில் இருப்பினும் மாநில அரசின் கல்வி உரிமையை முற்றாய்ப் பறிக்கும் முன் முயற்சியாகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்தெறிந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் எதிகாலத்தினை இல்பொருளாக்கும் நோக்கோடும் தமிழ்நாட்டு மாணவர்களின் மீது புகுத்தப்பட்டுள்ள மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது.*



*🌟இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களைத் தாங்கள் விண்ணப்பித்த மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலம் விட்டு மாநிலம் சென்று தேர்வு எழுதும் வகையில் கேரளா, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் செயல்பாடு எவ்வகையிலும் ஏற்கத்தகுந்ததல்ல. *5000-ற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உளவியல் ரீதியாகப் பாதிக்கவைத்துள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் செயல் மிகுந்த கண்டனத்திற்கு உரியது.*



*🌟விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தேர்வு மையங்களை அமைக்க ஒரு மாத காலம் அவகாசம் இருந்தும் அதைத் திறம்பட ஒழுங்குபடுத்தும் திறனற்றுப் போனதும், சேலம் மாணவியின் தேர்வறை நுழைவுச் சீட்டில் ஏற்பட்ட பிழையும், மதுரையில் தேர்வு தொடங்கி 2 மணி நேரங்களாக 101 மாணவர்களுக்கு உரிய வினாத்தாள் வழங்காததும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இழிநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.*



*🌟நீட் தேர்வு மையங்கள் மாநிலம் விட்டு மாநிலம் அமைக்கப்பட்டதை எதிர்த்துத் தனிநபர் தானே முன் வந்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த போதும் அதுபற்றிய சிந்தையற்று தமிழ்நாடு அரசு இருந்தது, தனது மாநில மாணவர்கள் மீதான மாநில அரசின் அக்கறையையே எடுத்துக் காட்டுகிறது. குறைந்தபட்சம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு மேல்முறையீடுக்குச் சென்ற போதாவது  தனது மாநில மாணவர்களின் நலனைக் காக்கும் நோக்கில் மாநில அரசு அவ்வழக்கில் ஆஜராகி சட்டப்படியான நியாயத்தைப் பெற்றுத்தர முயன்றிருக்க வேண்டும்.*



*🌟ஆனால், நீட் தேர்வு நடைமுறைகள் மீது எவ்விதத் தனிக்கவனமும் செலுத்தாது இருந்ததோடு, தனது மாநில மாணவர்களின் சட்டப்படியான உரிமை கோரும் சட்டப் போராட்டத்தையும் வேடிக்கை மட்டும் பார்த்து ஒதுங்கியே நின்றிருந்தது வேதனை தருவதாகவே உள்ளது.*



*🌟வியாழன் அன்று உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்த போதும் வெள்ளி நண்பகல் வரை தேர்வெழுதும் மாணவர்களுக்காக எவ்வித பயண முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளாது அமைதி காத்துவிட்டு, தேர்வு மையங்களுக்குப் பயணப்பட வேண்டிய இறுதி நேரத்தில் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்ற அரசின் அறிவிப்பானது காலந்தாழ்ந்த மருந்தாகவே அமைந்தது என்பதைப் பயண அலைக்கழிப்பால் பலியான கிருஷ்ணசாமி அவர்களின் மரணம் உணர்த்தியுள்ளது.*



*🌟தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையையும், அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்தையும் தமிழக மக்களின் இந்நுயிரையும் காக்கும் நோக்கில், தமிழக அரசு இனியேனும் விரைந்து செயல்பட வேண்டும் என  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியானது வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*


*_கருவியும் காலமும் செய்கையும் செய்யும்_*

*_அருவினையும் மாண்டது அமைச்சு._* (குறள் 631)



*🌟மேலும், தங்கள் மாநிலத்திற்குத் தேர்வெழுத வந்த தமிழ் நாட்டு மாணவர்களுக்குப் போதுமான வசதிகளை மனமுவந்து செய்து கொடுத்த கேரள முதலமைச்சர் திரு.பிரனாயி விஜயன் அவர்களுக்கும், இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், கேரள & இராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தினருக்கும், தமிழ்நாட்டில் இருந்து உதவிகள் வழங்கிய தன்னார்வலர்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது புரட்சிகர வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


பூரி (ஒரிசா),

06.05.2018.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: