🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_46.html
*⚡செய்தி அறிக்கை - 19.05.2018⚡*
*🌟சமீபகாலமாக பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக பல்வேறு செய்திகள் உலா வந்துகொண்டிருந்தன. அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த இயலாத சூழலில் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவிக்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்து 24 ஆண்டுகலாக தனி நிர்வாக அமைப்பாகச் செயல்பட்டு வந்த தொடக்கக்கல்வித்துறை என்ற நிர்வாக அமைப்பு இல்லாத சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இம்முடிவை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வன்மையாக எதிர்க்கிறது.
*🌟தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறைக்கென தனி இயக்குநரகம் வேண்டுமென முதன்முதலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை எழுப்பியது. அதற்கு நம் பேரியக்கம் அரசுக்கு முன்வைத்த காரணங்கள் இவைதான்,
*⚡பள்ளிக்கல்வித்துறையில் அதிகமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணியாற்றுவதும், அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் பயில்வதும், அதிகமான எண்ணிக்கையில் பள்ளிகள் செயல்படுவதும் தொடக்கக்கல்வியில் தான்.*
*⚡எனவே இவ்வளவு பெரிய நிர்வாக அமைப்பைச் சிறப்பாக நிர்வகிக்க தொடக்கக்கல்வித்துறைக்கென தனி இயக்குநரகம் வேண்டும் என்பதுதான் அக்காரணங்களாகும்.*
*🌟_நமது பேரியக்கத்தின் இக்கோரிக்கை பின்னாளில் டிட்டோஜேக்கின் கோரிக்கையாக மாறியது என்பதுதான் வரலாறு._*
*🌟அன்றைய தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க அரசு நமது கோரிக்கையை ஏற்று*
*⚡GO(MS) NO-588 (Education, Science & Technology Department) Dt.15.07.1994*
*அரசாணையின் மூலம் தொடக்கக்கல்வி துறைக்கென தனி இயக்குநரகம் ஏற்படுத்தி ஆணையிட்டது. அன்றைய அ.தி.மு.க அரசு ஆணையிட்டதை இன்றைய அ.தி.மு.க அரசு 24 ஆண்டுகளுக்குப் பிறகு
*⚡GO(MS) NO-101 (School Education (Budget 1) Department) Dt.18.05.2018*
*ஆணையின் மூலம் ரத்துசெய்திருக்கிறது.*
*🌟அன்று தொடக்கக்கல்வித் துறைக்கென தனி இயக்குநரகம் ஏற்படுத்துவதற்கு அன்றைய அ.தி.மு.க அரசால் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டதோ அதே காரணங்கள் இன்னும் உள்ளன. ஆனால் அம்மாவின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் இன்றைய தமிழக அரசு அம்மா செய்த நற்காரியத்தை இப்படி குழி தோண்டி புதைத்திருப்பது என்ன நோக்கத்திற்காக என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே தமிழக அரசின் இம்முடிவு தொடக்கக்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது என்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது.*
*🌟தொடக்கக்கல்வித்துறை தனி இயக்குநரகம் மூலம் முன்புபோலவே நிர்வகிக்கப்பட தமிழக அரசு ஆவணசெய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
⚡தோழமையுடன்;
*_தோழர்.ச.மயில்,_*
*_மாநில பொதுச்செயலாளர்,_*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி._*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment