Wednesday, 9 May 2018

*ஏன்? ஏன்?? ஏன்???*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_9.html



*🌟2000, 3000 இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் நான்கு நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், அவர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஆனால் இன்று....*


*🌟லட்சக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் வழியிலும் சொந்த ஊர்களிலும் கைது செய்து நமது போராட்ட வீரியத்தை காவல்துறை குறைத்து விட்டார்கள்.*


*🌟வீரியத்தை குறைத்தாலும் காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி போராட்ட களத்தில் காலடி பதித்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்ட வியூகத்தை மாற்றியமைத்து வலிமை சேர்த்தார்கள்.*


*🌟அதுபோக இராஜரத்தினம் விளையாட்டரங்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த 3000 மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிற்பல் வேளையில் தங்களது தலைமையை உடனே இங்கு அழைத்து வாருங்கள் என முழக்கம் செய்து மைதானத்திலிருந்து வெளியேறி சாலையில் அமர்ந்தும் படுத்தும் போராட்டம் நிகழ்த்தினார்கள்.*


*🌟அதன்பின்னர் ஜாக்டோ ஜியோ தலைவர்கள் அனைவரையும் உடனே அழைத்து வரப்பட்டார்கள்.*


*🌟இந்த வீரம் மாலையில் எங்கே போனது தலைமைகள் முதலில் முற்றுகைப் போராட்டம் காத்திருப்பு போராட்டமாக தொடரும் என அறிவித்த பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது எதனால்?*


*🌟சரி ஜாக்டோ ஜியோ ஒற்றுமை கருதி போராட்டம் வாபஸ் என்று தகவல் வந்தது, சரி ஏனோ மனம் ஏற்காமல்  கைதானவர்கள் விளையாட்டரங்கத்தை விட்டு அரை மனதுடன் வெளியேறினார்கள்.*


*🌟ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என அறிவிப்பு விடுத்தார்கள், சரி அது ஏன் கூட்டம் 20 ம் தேதி, ஏன் 12 நாள் கழித்து கூட்டம் நடத்துரீர் என்பது புரியாத புதிராய் உள்ளது.*


*🌟கூட்டம் நடத்துவதற்கே 12 நாள் அவகாசம் தேவைப்பட்டால் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பிற்கு எத்தனை நாள் அவகாசம் தேவைப்படுமோ தெரியவில்லையே????*


*🌟அப்படியே ஒரு வழியாக அடுத்த மாதம் போராட்டம் அறிவித்தாலும் பள்ளி திறக்கப்பட்டு விட்டதால் போராட்டம் இன்னும் சிறிது தள்ளி வைக்கலாம் என இப்படியே எத்தனை நாள்கள் ஏமாற்ற போகிறீர் பதில் கூறுங்கள் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களே......*


*என்று தனியும் இந்த சுதந்திர தாகம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



2 comments:

Praba Vanisha said...

வலியை அனுபவிப்பர்களால் மட்டுமே உண்மையாக போராடயும்.

Praba Vanisha said...

வலியை அனுபவிப்பர்களால் மட்டுமே உண்மையாக போராடயும்.