*தொ.க.து கலந்தாய்வு குளறுபடி : தன்னெழுச்சிப் போராட்டங்களை உடனே மேற்கொள்ள TNPTF மாநிலமையம் அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/tnptf.html
*🌟8 மாவட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு இல்லை எனும் உத்தரவைத் திரும்பப்பெற TNPTF வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாத சூழலில்,*
*🌟தற்பொழுது, மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் 8 மாவட்டங்களைத் தவிர்த்து வேறெந்த மாவட்டங்களுக்கும் மாறுதலில் செல்ல தடை விதிக்கப்பட்டு 8 மாவட்டங்கள் மட்டுமே கலந்தாய்விற்குக் காட்டப்பட்டுள்ளது.*
*🌟இது முழுக்க முழுக்க இடைநிலை ஆசிரியர்களின் பணிமாறுதல் உரிமையை முழுமையாக மறுக்கும் செயலாகும்.*
*🌟இத்தகைய உரிமைப் பறிப்பைக் கண்டித்து நமது இயக்கத் தோழர்கள் அந்தந்த *மாவட்டக் கலந்தாய்வு மையங்களில் தன்னெழுச்சி ஆர்ப்பட்டத்தை உடன் மேற்கொள்ள மாநில மையம் கேட்டுக் கொள்கிறது.*
*உரிமைப் பறிப்பை*
*உடைத் தெறியும்*
*உரிமைக் குரல்*
*ஓங்கி ஒலிக்கட்டும்!*
_தோழமையுடன்,_
*ச.மயில்,*
_பொதுச் செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*தகவல் பகிர்வு:*
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment